Asianet News TamilAsianet News Tamil

Vi Offer: வோடஃபோனில் புதிதாக ரூ. 99 ரீசார்ஜ் பிளான்! குறைந்த விலையில் நிறைந்த பலன்கள்!!

வோடபோன் ஐடியா (Vi), நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில்,வெறும் 99  ரூபாய்க்கு ரீசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. இதிலுள்ள சிறப்பம்சங்கள், பலன்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம். 

Vi Vodafone Idea has introduced an entry-level recharge of just Rs. 99 for users across India
Author
First Published Jan 31, 2023, 12:59 PM IST

இந்தியாவில் ஏர்டெல், ஜியோவுக்கு அடுத்தபடியாக வோடஃபோன் ஐடியா நிறுவனம் நெட்வொர்க் சேவைகளை வழங்கி வருகிறது. ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை புயல் வேகத்தில் விரிவுபடுத்தி வரும் நிலையில், வோடஃபோன் ஐடியா நிறுவனம் இன்னமும் 4ஜியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் குறைந்த விலை ரீசார்ஜ் பிளான்கள், இரவு நேர இலவச டேட்டா உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. 

இந்த நிலையில், தற்போது வோடஃபோன் ஐடியா நிறுவனம் குறைந்த விலையில் ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை வெறும் 99 ரூபாய் மட்டுமே. ஆனால், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. Vi 99 ரூபாய் பிளானில் உள்ள பலன்கள்:

வோடஃபோன் ஐடியாவில் 99 ரூபாய் ரீசார்ஜ் பிளானில் 99 ரூபாய்க்குமான டாக்டைம் கிடைக்கிறது. 200 mb டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டி ஆகியவை வழங்கப்படுகிறது. இதில் எஸ்எம்எஸ் சேவை இல்லை. ஏற்கெனவே இதுதொடர்பாக புகார்கள் உள்ளன. அதாவது, தற்போது MNP முறையில் ஒரு நெட்வொர்க்கில் இருந்து இன்னொரு நெட்வொர்க்கிற்கு மாற வேண்டுமென்றால், எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

Jio Vs Airtel: இரண்டிலும் ஒரே விலை பிளான். ஆனால், எது பெஸ்ட் தெரியமா?

ஆனால், இந்த 99 ரூபாய் திட்டத்தில் மெசேஜ் இல்லை என்பதால், இத்திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களால் ஜியோவுக்கோ, ஏர்டெலுக்கோ எளிதில் மாற முடியாது என்று கூறப்படுகிறது.  சாதாரணமாக இன்கமிங், அவுட்கோயிங் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு 99 ரூபாய் திட்டம் ஏற்றது.ஜியோவில் ஆரம்ப நிலை பிளானின் விலை 149 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

99 ரூபாய் பிளான் குறித்து வோடஃபோன் ஐடியா தரப்பில் கூறுகையில், ‘மலிவு விலையில் ரீசார்ஜ் பிளானை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மிகவும் கவர்ச்சிகரமான விலையில் சிறந்த சேவைகளை வழங்க Vi நிறுவனம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அந்த வகையில், தற்போது 99 ரூபாய் பிளான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த டிஜிட்டல் சகாப்தத்தில் மொபைல் இணைப்பின் பலன்களைத் தொடர்ந்து அனுபவிக்கலாம், என்று தெரிவித்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios