Jio Vs Airtel: இரண்டிலும் ஒரே விலை பிளான். ஆனால், எது பெஸ்ட் தெரியமா?

ஜியோ, ஏர்டெல் இரண்டு நிறுவனங்களும் ரூ.296 ரீசார்ஜ் பிளானை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. இந்தத் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ்கால் மற்றும் கூடுதல் பலன்கள் உள்ளன. இவற்றில் எந்த நெட்வொர்க் சிறந்த பலன்களை வழங்குகிறது என்பதை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

Jio Rs 296 vs Airtel Rs 296 plan: Data, calling, and other benefits compared, check details here

இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களாக உள்ளனர். இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் ஃபைபர் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குகின்றன. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை போட்டிப்போட்டுக் கொண்டு வழங்கி வருகின்றன. 

இந்த இரண்டு நெட்வொர்க் நிறுவனங்களும் முடிந்த வரையில் தங்கள் கட்டணங்களை ஒரே மாதிரியாக வைத்திருக்க முனைகிறார்கள், ஆனால் அவற்றின் ரீசார்ஜ் பலன்களில் சில வித்தியாசங்கள் உள்ளன.  இப்போது ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டும் ரூ. 296க்கான மாதாந்திர ரீசார்ஜ் பிளானை வைத்துள்ளன. இந்த திட்டமானது வாய்ஸ் கால், டேட்டா மற்றும் கூடுதல் பலன்களை கொண்டது. 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. 

இருப்பினும், இரு நிறுவனங்களும் இந்த மாதாந்திர திட்டத்தை தங்கள் தரப்பில் தனித்துவமாகிக் காட்டுவதற்காக சில கூடுதல் அம்சங்களை வழங்குகின்றன. எந்த நெட்வொர்க் சிறந்த பலனை வழங்குகிறது என்பதை கண்டுபிடிக்க, குறிப்பிட்ட விவரங்களைக் கூர்ந்து கவனிப்பது அவசியம்.

ஜியோ vs ஏர்டெல்: ரூ.296 ப்ரீபெய்ட் பிளான் விவரங்கள்:

ஜியோவில் ரூ 296 பிளானைப் பார்க்கும் போது வழக்கம் போல் அன்லிமிடேட் வாய்ஸ் கால், 30 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. டேட்டாவைப் பொறுத்தவரை, பயனர்கள் 25 ஜிபி பேக்கைப் பெறுகிறார்கள், இது மாதம் முழுவதும் பயன்படுத்தலாம். கூடுதல் பலன்களாக JioTV, JioCinema, JioSecurity மற்றும் Jio Cloud ஆகியவற்றிற்கான இலவச சந்தா வழங்கப்படுகிறது..

296 திட்டமும் ஜியோ 5ஜி சலுகையின் கீழ் வருகிறது. இதன் கீழ், ஜியோ சில குறிப்பிட்ட சந்தாதாரர்களுக்கு ஏற்கெனவே உள்ள ரீசார்ஜ் திட்டத்தோடு சேர்த்து அன்லிமிடேட்ட 5G டேட்டா வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.296 பிளான்: 

மறுபுறம், ஏர்டெலில் இதே ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடேட் வாய்ஸ்கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், 25ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 30 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. அப்பல்லோ 24|7 சர்க்கிள் என்ற கூடுதல் சலுககைளை வழங்குகிறது. ஆனால், எத்தனை பேர் இந்த அப்பல்லோ சலுகையை பயன்படுத்துவார்கள் என்பது தெரியவில்லை. மேலும்,  FASTag இல் ரூ. 100 கேஷ்பேக், இலவச Hellotunes மற்றும் Wynk Musicக்கான இலவச சந்தா ஆகியவை வழங்கப்படுகிறது.

Trichy Talents: பல்வேறு வசதிகளுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலைவாய்ப்பு செயலி உருவாக்கம்! 

எது பெஸ்ட்?

வாய்ஸ்கால், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா பலன்களைப் பார்க்கும்போது, ​​ஜியோ மற்றும் ஏர்டெல் இரு நிறுவனங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பலன்களை வழங்குகின்றன. இரண்டும் 30 நாட்கள் வேலிடிட்டி, தினசரி எஸ்எம்எஸ்,  இன்டர்நெட் பேக் உள்ளன. 

கூடுதல் நன்மைகளில் மட்டுமே சில சில வேறுபாடு உள்ளது. ஜியோ தனது OTT சேவைகளுக்கு இலவசமாக வழங்குகிறது. ஆனால், ​​ஏர்டெலில் கேஷ்பேக் மற்றும் சிலவற்றை வழங்குகிறது. இரண்டு திட்டங்களும் ஒரே விலை நிலையில் உள்ளன, எனவே நீங்கள் ஜியோ பயனராகவோ அல்லது ஏர்டெல் ஆகவோ இருந்தால், உங்கள் இணையப் பயன்பாட்டுக்கு ஏற்ப மாதாந்திர பேக் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios