எலான் மஸ்க்கை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.. உலகம் முழுவதும் முடங்கிய ட்விட்டர் !
உலகம் முழுவதும் சில பயணாளர்களுக்கு ட்விட்டர் தளம் முடங்கியது. இது குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட பிரபல மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய எலான் மஸ்க், கடந்த வாரம் ட்விட்டர் தலைவராக பொறுப்பேற்றார். அதிலிருந்து, பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
ட்விட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு என பல்வேறு அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினார். இதைத்தொடர்ந்து ட்விட்டரில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளில் ‘புளூ டிக்கை’ பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ட்விட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, ட்விட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும். இதற்கு மாத கட்டணம் வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது, பல ஆண்டுகளாக இயங்காமல் இருக்கும் 1.5 பில்லியன் கணக்குகள் ட்விட்டரில் இருந்து நீக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார். இந்த நிலையில், உலகம் முழுவதும் சில பயணாளர்களுக்கு ட்விட்டர் தளம் முடங்கியது. இது குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க.. முதல்வரின் முக்கிய துறை.. நீங்க தான் அமைச்சரா ? உதயநிதி ஸ்டாலின் சொன்ன ‘அந்த’ பதில் !