TVS Jupiter ZX : ப்ளூடூத், வாய்ஸ் அசிஸ்ட் உடன் புது ஸ்கூட்டர் - மாஸ் காட்டிய டி.வி.எஸ்.
TVS Jupiter ZX : டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் புதிய ஜூப்பிட்டர் ZX வேரியண்ட் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் ஜூப்பிட்டர் ZX வேரியண்டை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஜூப்பிட்டர் ZX வேரியண்டில் SMARTXONNECT அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் வாய்ஸ் அசிஸ்ட் அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. புதிய டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ZX விலை ரூ. 80,973, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர் மேட் பிளாக் மற்றும் காப்பர் பிரவுன் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.
ஜூப்பிட்டர் கிராண்டெ ஸ்கூட்டரில் முதல் முறையாக ப்ளூடூத் கனெக்டிவிட்டியை டி.வி.எஸ். அறிமுகம் செய்தது. தற்போது இந்த மாடலில் முழுமையான டிஜிட்டல் கன்சோல், வாய்ஸ் அசிஸ்ட், நேவிகேஷன் அசிஸ்ட் மற்றும் எஸ்.எம்.எஸ். ய கால் அலெர்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 110சிசி பிரிவில் வாய்ஸ் அசிஸ்ட் வசதி கொண்ட முதல் ஸ்கூட்டர் என்ற பெருமையை ஜூப்பிட்டர் பெற்று இருக்கிறது.
டி.வி.எஸ். SMARTXONNECT பிளாட்ஃபார்மில் ப்ளூடூத் சார்ந்த தொழில்நுட்பம் பிரத்யேக டி.வி.எஸ். கனெக்ட் மொபைல் செயலியுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. டி.வி.எஸ். கனெக்ட் மொபைல் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் கிடைக்கிறது. இந்த அம்சம் கொண்டு ப்ளூடூத் ஹெட்போன், வயர்டு ஹெட்போன் உள்ளிட்டவைகளை இணைக்க முடியும். ஸ்கூட்டரின் ரெஸ்பான்ஸ் ஸ்பீடோமீட்டரில் தெரிகிறது.
மற்ற வேரியண்ட்களை விட ஜூப்பிட்டர் மாடலின் உள்புற பேனல்களில் சில்வர் ஓக் நிறம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் புதிய டூயல் டோன் சீட், முற்றிலும் புதிய டிசைன் வழங்கப்பட்டு உள்ளது. கூடுதலாக இந்த வேரியண்ட்டில் பின்புறம் பேக்ரெஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்கூட்டரில் 110சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் 5.8 கிலோவாட் திறன், 8.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் இன்டெலிகோ தொழில்நுட்பம், ஐ-டச் ஸ்டார்ட் மற்றும் இண்டகிரேடெட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப், 2 லிட்டர் குளோவ்பாக்ஸ் மொபைல் சார்ஜர், 21 லிட்டர் ஸ்டோரேஜ், முன்புறம் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதுதவிர டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது 125சிசி ரைடர் மோட்டார்சைக்கிள் மாடலை வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகம் செய்யும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. புதிய டி.வி.எஸ். ரைடர் 125சிசி மாடல் இந்தியா மட்டுமின்றி லத்தீன் அமெரிக்கா, வங்கதேசம் என பல்வேறு இதர நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலுக்கு சமபீத்தில் 2022 ஆண்டுக்கான சிறந்த இந்திய மோட்டார்சைக்கிள் என்ற விருதை வென்று இருந்தது.