Asianet News TamilAsianet News Tamil

மெலிவு, வேகம், ஸ்டைல்; OPPO Pad Air டேப்லெட் மார்க்கெட்டை ஆளப்போகிறது

புதிய OPPO Pad Air முன்னணி தொழில்நுட்பங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு அழகியலின் ஒருங்கிணைப்பு ஆகும். 4GB/64GB டேப்லெட்டுக்கான விலை ரூ.16,999 மற்றும் 4GB/128GB டேப்லெட்டுக்கான விலை ரூ.19,999 ஆகும். 
 

thin agile and stylish oppo pad air is born to lead
Author
Chennai, First Published Jul 29, 2022, 11:22 PM IST

புதிய OPPO Pad Air முன்னணி தொழில்நுட்பங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு அழகியலின் ஒருங்கிணைப்பு ஆகும். 4GB/64GB டேப்லெட்டுக்கான விலை ரூ.16,999 மற்றும் 4GB/128GB டேப்லெட்டுக்கான விலை ரூ.19,999 ஆகும். 

OPPO Pad Air டேப்லெட்டின் சிறப்பம்சங்களை பார்ப்போம். குறைவான விலைக்கு உயர்தர தொழில்நுட்பங்கள் நிறைந்தது OPPO Pad Air.

உயர்தர செயல்திறன்:

thin agile and stylish oppo pad air is born to lead

OPPO Pad Air-ன் மிகச்சிறந்த பலம், 8 Cores-களுடன் கூடிய Qualcomm Snapdragon 680 processor தான். இவ்வளவு குறைவான விலைக்கு 6nm processor கிடைக்காது.

AI System Booster 2.1 உடன் இணைந்த செயலி, பல செயல்களை செய்வதை எளிதாக்குகிறது, குறைவான பவரை மட்டுமே எடுத்துக்கொள்கிறது, அதாவது high resolution videos, மொபைல் கேம்ஸ், பல பணிகளை எவ்வித தடையுமின்றி எளிதாக செய்கிறது. நீண்ட நேர பேட்டரி பேக்கப்புடன், உயர் செயல்திறனை அனுபவிக்க முடியும்.

7100 mAH திறன் கொண்ட பேட்டரியை பெற்றிருப்பதால் ஒருநாள் முழுக்க பயன்படுத்தலாம். இந்த டேப்லெட்டை 100% சார்ஜ் செய்து, 1080P HD வீடியோக்களை தொடர்ச்சியாக 12 மணி நேரம் பார்க்க முடியும் என்று ஓப்போ தெரிவித்துள்ளது. இவ்வளவு பெரிய பேட்டரியாக இருக்கும் நிலையிலும், இதன் எடை குறைவுதான். மெல்லிய, நெகிழ்வான பிடியை உறுதி செய்கிறது.

4GB + 64 GB மற்றும் 4GB + 128GB ஆகிய 2 திறன்களில் இந்த டேப்லெட் கிடைக்கிறது. RAM 3GB வரை உள்ளது. ROM 512GB வரை விரிவாக்கம் செய்துகொள்ளலாம். 

உயர்தர காட்சி மற்றும் ஒலி:

thin agile and stylish oppo pad air is born to lead

பயனாளர்களின் கண்களை பாதுகாக்கும் நோக்கில், 10.36-inch 2K WUXGA+IPS eye care ஸ்க்ரீனை வழங்குகிறது OPPO. மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், இந்த டேப்லெட் மட்டுமே, TUV Rheinland Low Blue Light protection சான்றிதழை பெற்றது. கண்களுக்கு 2048 லெவல் வரை ஆதரிக்கிறது மற்றும் சுற்றுப்புறத்திற்கு ஏற்ப பிரகாசத்தை மாற்றியமைத்து கொள்கிறது.

நீங்கள் avid வாசிப்பாளராக இருந்தால், உங்களுக்காக E-Book B/W display இருக்கிறது. கண்களுக்கு ஏற்றவகையில் மோடை நீங்கள் ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். எனவே கண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நீங்கள் வாசிக்கலாம்.

OPPO Pad Air 4 ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. 0.88cc பெரிய சவுண்ட் சேம்பர் மற்றும் 1W பவர் ஆகியவை ஒலித்திறனை மேம்படுத்துகிறது. இந்த டேப்லெட் Dolby Atmos technology-யை ஏற்றுக்கொள்கிறது. இது பயனாளர்களை 3D ஒலி அனுபவத்தையும் Dolby Audio decoding-ஐயும் அனுபவிக்க உதவுகிறது.

அழகிய வடிவமைப்பு:

thin agile and stylish oppo pad air is born to lead

OPPO Pad Air-ன் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், அதன் Stylish grey color டிசைன் மற்றும் குறைவான எடை. எக்ஸ்க்ளூசிவான metal splicing design, Sunset Dune 3D texture. Flagship OPPO Glow process-ஐ பயன்படுத்தி சிறப்பாக வடிவமைத்துள்ளது OPPO. பின்பக்க மெட்டல் பேனல், பளபளக்கும் மேட் ஃபினிஷிங்கை பெற்றுள்ளது. மேல்பக்க பேனல், 5 அடுக்கு OPPO Glow கோட்டிங்கை பெற்றுள்ளது. முதல் முறையாக 3D finishing technology பயன்படுத்தப்பட்டுள்ளது.

6.94mm தடிமன் மற்றும் 440g எடை கொண்ட மிகவும் மெலிதான, எடை குறைவான டேப்லெட் OPPO Pad Air ஆகும். நான்கு பக்கங்களிலும் உள்ள 8mm ultra-narrow black bezel design சாதனத்தை சுறுசுறுப்பாக்குகிறது. 

OS-ஐ அனுபவியுங்கள்:

thin agile and stylish oppo pad air is born to lead

OPPO  Pad Air-ல் ColorOS12.1 சில சர்ப்ரைஸ்களை அளிக்கிறது. பல சாதனங்களை இணைத்துக்கொள்ளும் வசதி பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ள விதத்தில் இருக்கும். ரிவர்ஸ் கண்ட்ரோல், டெக்ஸ்ட் இன்புட், தகவல்களை எடிட் செய்வது ஆகியவற்றை இந்த டேப்லெட்டிலேயே செய்யலாம்.  

கோப்புகளை தொட்டு இழுத்து தேவையான இடத்தில் வைத்துக்கொள்ள முடியும். ஃபோட்டோ, வீடியோக்களை கூட தொட்டு நகர்த்தி உங்களது OPPO Pad Air டேப்லெட்டுக்கு நகர்த்தி கொள்ளலாம்.

மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், ஃபோனின் மொபைல் நெட்வொர்க்கை பயன்படுத்த முடியும். உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனின் நெட்வொர்க்கை கனெக்ட் செய்து டேப்லெட்டில் Wi-Fi மூலம் இண்டர்நெட் பயன்படுத்தலாம். 

பெரிய ஸ்க்ரீன் இருப்பது சிறப்பான பலம். வெறும் இரண்டு விரலில் ஸ்வைப் செய்து ஸ்க்ரீனை பிரிக்கலாம். Dual Windows சிஸ்டம் பல பக்கங்களை ஒரே சமயத்தில் திறந்து உதவ அனுமதிக்கும். 

OPPO Pad Air கண்டிப்பாக சரியான சாய்ஸ்!

OPPO Pad Air டேப்லெட் எடை குறைவான, அருமையான டிசைனை கொண்டது. உயர்தர அம்சங்களை கொண்ட டேப்லெட் என்பதால் செயல்திறன் மிகச்சிறப்பாக இருக்கிறது. Metallic body, segment-first 6nm processor மற்றும் 7100mAh பேட்டரி உயர் செயல்திறனை உறுதி செய்கிறது. சிறந்த செயல்திறன், படிப்பு, பொழுதுபோக்கு என பலவிதமான வசதிகளுடன் ஒரு டேப்லெட்டை எதிர்நோக்குபவர்களுக்கு OPPO Pad Air சிறப்பான சாய்ஸ்.

OPPO Pad Air டேப்லெட் Flipkart, OPPO store மற்றும் மற்ற மெயின்லைன் ரீடெய்ல் கடைகளிலும் கிடைக்கும்.

OPPO Pad Air டேப்லெட்டை OPPO Reno 8 Series மொபைல்களுடன் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வாங்கலாம். MY OPPO App-ல் OPPOverse ஆஃபர் கிடைக்கும். மேலும் ரூ.5999 மதிப்புள்ள OPPO watch-ஐ ரூ.1க்கு பெற முடியும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios