MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • 14 நாள் கூடுதல் வேலிடிட்டி.. மார்ச் 31 கடைசி தேதி.. பிஎஸ்என்எல் கொடுத்த அதிரடி சலுகை

14 நாள் கூடுதல் வேலிடிட்டி.. மார்ச் 31 கடைசி தேதி.. பிஎஸ்என்எல் கொடுத்த அதிரடி சலுகை

பிஎஸ்என்எல் ஹோலி பண்டிகையை முன்னிட்டு தனது பிரிபெய்ட் திட்டத்தில் ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. மார்ச் 31, 2026க்குள் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு, வழக்கமான 150 நாட்களுடன் கூடுதலாக 14 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 03 2026, 12:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பிஎஸ்என்எல் மார்ச் 31 சலுகை
Image Credit : Gemini

பிஎஸ்என்எல் மார்ச் 31 சலுகை

ஹோலி பண்டிகையை முன்னிட்டு அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், தனது பிரிபெய்ட் பயனர்களுக்காக சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் இந்த ஆஃபரில், ரீசார்ஜ் செய்தால் கூடுதல் 14 நாட்கள் செல்லுபடியாகும் கால அவகாசம் கிடைக்கும். நீண்ட நாட்கள் செல்லுபடியாகும் திட்டம் தேடும் பயனர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பிஎஸ்என்எல் பண்டிகை ஆஃபர்
Image Credit : Getty

பிஎஸ்என்எல் பண்டிகை ஆஃபர்

இந்த ஹோலி சலுகை பிஎஸ்என்எல்-ன் ரூ.997 ரீசார்ஜ் திட்டத்துடன் கிடைக்கிறது. வழக்கமாக இந்த திட்டம் 150 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. ஆனால், மார்ச் 31, 2026க்குள் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், கூடுதலாக 14 நாட்கள் வழங்கப்படும். அதாவது மொத்தம் 164 நாட்கள் வரை சேவையை பயன்படுத்த முடியும். சலுகை காலத்தில் ரீசார்ஜ் செய்தாலே இந்த கூடுதல் நாட்கள் தானாக சேர்க்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

35
பிஎஸ்என்எல் 997 திட்டம்
Image Credit : Getty

பிஎஸ்என்எல் 997 திட்டம்

ரூ.997 திட்டத்தில் தினமும் 2GB உயர்வேக டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா வரம்பு முடிந்த பின்னர் வேகம் குறைக்கப்படும். இதனுடன் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பில்லா குரல் அழைப்புகளும் வழங்கப்படுகின்றன. நீண்ட கால பயன்பாட்டுடன் அதிக டேட்டா தேவையுள்ளவர்களுக்கு இந்த திட்டம் பொருத்தமாக இருக்கும். மாணவர்கள் மற்றும் அதிகமாக இணையத்தை பயன்படுத்துவோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

45
பிஎஸ்என்எல் ஹோலி சலுகை
Image Credit : Google

பிஎஸ்என்எல் ஹோலி சலுகை

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வது மிகவும் எளிது. பிஎஸ்என்எல்-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது பிஎஸ்என்எல் SelfCare செயலி மூலம் நேரடியாக ரீசார்ஜ் செய்யலாம். அதேபோல் PhonePe, Google Pay போன்ற மூன்றாம் தரப்பு ரீசார்ஜ் செயலிகளிலும் இந்த திட்டம் கிடைக்கும். அருகிலுள்ள ரீடெய்லர் கடைகளிலும் ரீசார்ஜ் செய்ய வசதி உள்ளது.

55
கூடுதல் வேலிடிட்டி கிடைக்கும்
Image Credit : X

கூடுதல் வேலிடிட்டி கிடைக்கும்

சலுகை காலத்திற்குள் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கூடுதல் வேலிடிட்டி கிடைக்கும் என்பதால், பயனர்கள் மார்ச் 31க்கு முன் ரீசார்ஜ் செய்ய வேண்டும். நீண்ட நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்துடன் கூடுதல் நாட்கள் கிடைப்பதால், பிஎஸ்என்எல்-ன் இந்த ஹோலி சலுகை பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)
பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் திட்டம்
மறுஊட்டத் திட்டங்கள்
நகர்பேசி
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
54 மணி நேர பேட்டரி, 3D ஆடியோ: களமிறங்கியது ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர்
Recommended image2
வெறும் 5.2 கிராம் எடையுள்ள அரிய இரட்டைத் தலை ஆமை: இயற்கையின் அபூர்வ அதிசயம்!
Recommended image3
AI யுகத்தில் இந்தியாவின் அடுத்த பெரிய புரட்சி இதுதான்.! சரியான சிப்களே வெற்றியின் ரகசியம் – ராஜீவ் சந்திரசேகர்
Related Stories
Recommended image1
500 கிமீ ரேஞ்ச்.. காருக்குள் ஒரு திரையரங்கு அனுபவம்.. டிரிபிள் HD டிஸ்ப்ளே.. இந்தியாவே ஆடிப்போச்சு
Recommended image2
10 ஆண்டு நிம்மதியா இருக்கலாம்.. இந்த ஸ்கூட்டரை வாங்கினால் போதும்.. எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved