ஜுஜூபி விலையில் ஜியோவின் புதிய பிளான்! ஏர்டெல் எல்லாம் கிட்டயே நெருங்க முடியாது!!

குறைந்த வேலிடிட்டியில் சிறந்த டேட்டா பிளான் வேண்டும் என்றால் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198 திட்டத்தை தேர்வு செய்வது பொருத்தமாக இருக்கும்.

Reliance Jio Launches Rs. 198 Plan With Unlimited 5G Data, Voice Calling sgb

 ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது போட்டி நிறுவனங்களுக்கு ஷாக் கொடுக்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. 14 நாட்கள் வேலிடிட்டியுடன் 198 ரூபாய் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ரூ.198 க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டட் அழைப்புகள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறலாம்.

ஜியோ பயனர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் நல்ல திட்டமாக இது அறிமுகமாகியுள்ளது. ஜியோவில் ஏற்கெனவே ரூ.189 மற்றும் ரூ.199 விலையில் இரண்டு திட்டங்கள் உள்ளன. இந்த இரண்டு திட்டங்களிலும் அன்லிமிட்டட் அழைப்புகளுடன் பல சலுகைகள் உள்ளன. 

குறைந்த விலையில் அனைத்து பலன்களையும் பெற விரும்பினால், ரூ.198 க்கு ரீசார்ஜ் செய்யலாம். இந்தத் திட்டம் மூலம் அன்லிமிட்டட் அழைப்புகளை இலவசமாகப் பேசலாம். தினமும் 2 ஜிபி டேட்டாவும் கிடைக்கும். ஜியோ டிவி செயலி மூலம் பல டிவி சேனல்களைப் பார்க்கலாம். மேலும் பல ஜியோ செயலிகளையும் இலவசமாக பயன்படுத்தலாம். இந்த திட்டம் 14 நாட்களுக்கு செல்லுபடியாகும். 

சந்திராயன்-3 திட்ட கண்டுபிடிப்புகள் தேசிய விண்வெளி தினத்தில் வெளியாகும்: அமைச்சர் அறிவிப்பு

14 நாட்கள் வேலிடிட்டி என்பது குறைவாக இருப்பதாக உணர்ந்தால், 18 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.199 திட்டத்தைத் தேர்வு செய்யலாம். இந்தத் திட்டத்திலும் பல பலன்களைப் பெறுலாம். 189 பிளான் மிகவும் பிரபலமானது. இதில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

ஜியோ வாடிக்கையாளர்கள் தங்கள் தேவையைப் பொறுத்து இந்த மூன்று திட்டங்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். இணையத்தை அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால், நிறைய டேட்டா கொண்ட திட்டத்தில் சேரலாம். ஜியோவின் அனைத்து திட்டங்களிலும் அன்லிமிட்டட் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் ஆகியவை பொதுவானவை. இலவச டேட்டா அளவுதான் மாறுபடும்.

இது தவிர கூடுதல் டேட்டா ரீசார்ஜ் வசதியையுத் ஜியோ வழங்குகிறது. ஜியோ 5ஜி நெட்வொர்க்கையும் கொண்டிருக்கிறது. குறைந்த வேலிடிட்டியில் சிறந்த டேட்டா பிளான் வேண்டும் என்றால் ரூ.198 திட்டத்தை தேர்வு செய்வது பொருத்தமாக இருக்கும்.

ஜியோவை அடிச்சுத் தூக்கும் ஏர்டெல் பேமிலி பேக்! ஒரே ரீசார்ஜில் 4 பேருக்கு அன்லிமிட்டட் பலன்கள்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios