10 நிமிடத்தில் 2,50,000 ரெட்மி நோட்4 ஸ்மார்ட்போன் விற்பனை ...! சயாமி சாதனை .....!!!
ஸ்மார்ட் போன் தயாரிப்பில் பல நிறுவனங்கள் இருந்தாலும், தற்போது சயாமி ஸ்மார்ட் போன்ஸ் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ரெட்மி நோட் 4’
சென்ற வாரம் ரெட்மி நோட் 4’ ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று முதல் ஆன்லைன் மூலம் விற்பனைக்கு விடப்பட்டது.
சாதனை :
இதற்கு முன்னதாக ரெட்மி நோட் 3 , விற்பனைக்கு வந்தபோதும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது, ரெட்மி நோட் 4, மாபெரும் சாதனை புரிந்துள்ளது. அதன்படி, ஆன்லைனில் விற்பனைக்கு கொண்டு வந்தது. ஆன்லைன் விற்பனை தொடங்கிய அடுத்த 1௦ நிமிடத்திலேயே 2,50,000 ’ரெட்மி நோட் 4’ ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டு மாபெரும் சாதனை புரிந்துள்ளது. இதிலிருந்து , ரெட்மி ஸ்மார்ட்போன்கள் இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதை உணர முடியும்.
’ரெட்மி நோட் 4’ விலை :
இத்தனை சிறப்பு வாய்ந்த ’ரெட்மி நோட் 4’ ஸ்மார்ட் போனின் விலை 9,999 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது .
அதன்படி ,
2GB RAM + 32GB Flash - Rs 9999
3GB RAM + 32GB Flash - Rs 10,999
4GB RAM + 64GB Flash - Rs 12,999
நன்றி :
இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட் போன்களுக்கு இந்த அளவு ஆதரவு இருப்பதால், இந்தியாவின் சயாமி நிறுவன தலைமை பொறுப்பாளர் மனு ஜெயின் நன்றி தெரிவித்துள்ளார் என்பது கூடுதல் தகவல் .