MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • நெட் இல்லையென்றாலும் கவலையில்லை.. ஆஃப்லைன் வீடியோ, பேக்கிரவுண்ட் ப்ளே என அசத்தும் யூடியூப் லைட்!

நெட் இல்லையென்றாலும் கவலையில்லை.. ஆஃப்லைன் வீடியோ, பேக்கிரவுண்ட் ப்ளே என அசத்தும் யூடியூப் லைட்!

YouTube யூடியூப் பிரீமியம் லைட் திட்டத்தில் ஆஃப்லைன் டவுன்லோட் மற்றும் பேக்கிரவுண்ட் ப்ளே வசதிகள் வெறும் ரூ.89-க்கு அறிமுகம்! முழு விவரம் இதோ.அசத்தும் யூடியூப் லைட்!

2 Min read
Author : Suresh Manthiram
Published : Feb 26 2026, 10:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
YouTube
Image Credit : Gemini

YouTube

வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் யூடியூப் (YouTube), தனது பயனர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யூடியூப் பிரீமியம் லைட் (Premium Lite) திட்டத்தில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த இரண்டு சூப்பரான அம்சங்கள் தற்போது அறிமுகமாகியுள்ளன. இது குறித்த முழுமையான விவரங்கள் இதோ:

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
யூடியூப் லைட் யூசர்களுக்கு ஒரு ஜாக்பாட்!
Image Credit : Getty

யூடியூப் லைட் யூசர்களுக்கு ஒரு ஜாக்பாட்!

நாம் யூடியூபில் ஒரு சுவாரஸ்யமான வீடியோவோ அல்லது பாட்டோ கேட்டுக்கொண்டிருக்கும்போது, வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் வந்தால் செக் செய்ய வேறு ஆப்பிற்கு மாறுவோம். உடனே யூடியூப் வீடியோவும் நின்றுவிடும். இந்த எரிச்சலான அனுபவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே 'பேக்கிரவுண்ட் ப்ளே' (Background Play) வசதி கொண்டுவரப்பட்டது. ஆனால், இது இதுவரை முழுமையான பிரீமியம் (Full Premium) பயனர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தது.

தற்போது பயனர்களின் தொடர் கோரிக்கைகளை ஏற்று, மாதத்திற்கு வெறும் ரூ.89 கட்டணத்தில் கிடைக்கும் 'பிரீமியம் லைட்' திட்டத்திலேயே பேக்கிரவுண்ட் ப்ளே மற்றும் 'ஆஃப்லைன் டவுன்லோட்ஸ்' (Offline Downloads) ஆகிய இரண்டு பிரம்மாண்ட வசதிகளை யூடியூப் அறிமுகப்படுத்தியுள்ளது.

36
பேக்கிரவுண்ட் ப்ளே: இனி ஸ்க்ரீன் ஆஃப் ஆனாலும் பாட்டு ஒலிக்கும்!
Image Credit : Gemini

பேக்கிரவுண்ட் ப்ளே: இனி ஸ்க்ரீன் ஆஃப் ஆனாலும் பாட்டு ஒலிக்கும்!

பாட்காஸ்ட்கள் (Podcasts), நீண்ட நேர்காணல்கள் அல்லது மியூசிக் மிக்ஸ் கேட்பவர்களுக்கு இந்த அப்டேட் ஒரு வரப்பிரசாதம். இனி நீங்கள் வேறு செயலிகளைப் பயன்படுத்தும்போதோ அல்லது உங்கள் போன் லாக் (Screen off) ஆகியிருக்கும்போதோ கூட, வீடியோவின் ஆடியோ தடையின்றி பின்னணியில் ஒலித்துக்கொண்டே இருக்கும். இதற்காக இனி நீங்கள் அதிக பணம் செலுத்தி ஃபுல் பிரீமியம் திட்டத்திற்கு மாற வேண்டிய அவசியமில்லை.

46
ஆஃப்லைன் டவுன்லோட்: நெட் இல்லையென்றாலும் நோ டென்ஷன்!
Image Credit : Gemini

ஆஃப்லைன் டவுன்லோட்: நெட் இல்லையென்றாலும் நோ டென்ஷன்!

பயணங்களின் போது அல்லது இன்டர்நெட் சிக்னல் சரியாக கிடைக்காத இடங்களில் யூடியூப் பார்ப்பது கடினம். இதைத் தவிர்க்க, லைட் திட்ட பயனர்களும் இனி தங்களுக்குப் பிடித்த வீடியோக்களை வைஃபை (Wi-Fi) அல்லது மொபைல் டேட்டா மூலம் முன்னதாகவே டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளலாம். இன்டர்நெட் இல்லாத நேரங்களிலும் அவற்றை ஆஃப்லைனில் பார்த்து ரசிக்க இந்த அம்சம் பேருதவியாக இருக்கும்.

56
ரூ.89 vs ரூ.149: உங்களுக்கு எது பெஸ்ட்?
Image Credit : Gemini

ரூ.89 vs ரூ.149: உங்களுக்கு எது பெஸ்ட்?

தற்போதைய நிலவரப்படி பிரீமியம் லைட் திட்டத்தின் விலை மாதம் ரூ.89 மட்டுமே. இதில் உங்களுக்கு பேக்கிரவுண்ட் ப்ளே மற்றும் டவுன்லோட் வசதி கிடைத்துவிடும். ஆனால், இதில் 'யூடியூப் மியூசிக் பிரீமியம்' (YouTube Music Premium) வசதி கிடையாது.

66
யூடியூப் மியூசிக்
Image Credit : Gemini

யூடியூப் மியூசிக்

உங்களுக்கு யூடியூப் மியூசிக் ஆப் வசதியும் வேண்டும், அத்துடன் அனைத்து வீடியோக்களிலும் விளம்பரங்களே வரக்கூடாது என்றால், நீங்கள் ரூ.149 மதிப்பிலான வழக்கமான பிரீமியம் திட்டத்தை தேர்வு செய்யலாம். ஆனால், நீங்கள் அதிகமாக யூடியூப் வீடியோக்கள் மட்டுமே பார்ப்பவர் என்றால், உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் சிறந்த சாய்ஸ் இந்த புதிய பிரீமியம் லைட் திட்டம் தான்!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
அன்று C2H, இன்று ஓடிடி... 11 ஆண்டுகளுக்கு பின் வெளியான சேரனின் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படம் எப்படி இருக்கு?
Recommended image2
10,100mAh பேட்டரி, 200MP கேமரா: டூயல் ஃபேன் கூலிங், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் களமிறங்கிய ஹானர் வின் 2 ஸ்மார்ட்போன்!
Recommended image3
நீலக்கடலில் ஆச்சரியம்: ஓமன் கடற்கரையில் துள்ளிக்குதித்த அரிய வகை இளஞ்சிவப்பு டால்பின்கள்!
Related Stories
Recommended image1
விளம்பரம் இல்லாமல் YouTube பார்க்க ஆசையா? ஒரு வழி இருக்கு! ட்ரை பண்ணி பாருங்க!
Recommended image2
பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: குழந்தைகளை காப்பாற்ற YouTube -ன் மெகா திட்டம்! புதிய நிபந்தனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved