Asianet News TamilAsianet News Tamil

Redmi 10: அறிமுக சலுகைகளுடன், குறைந்த விலையில் அறிமுகமான ரெட்மி போன்!

Redmi 10: சியோமி நிறுவனத்தின் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது. 

Redmi 10 With Snapdragon 680 SoC Launched in India Price, Specifications
Author
Tamil Nadu, First Published Mar 17, 2022, 1:30 PM IST

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக அறிமுகமாகி இருக்கிறது. இது ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 10 குளோபல் வேரியண்டை விட முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. 

இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெட்மி 10 கடந்த வாரம் நைஜீரியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 10C ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடலாக இருக்கும் என தெரிகிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள ரெட்மி 10 மாடலில் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் மற்றும் டூயல் பிரைமரி கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது. 

இந்த ஸ்மார்ட்போன் 6.71 இன்ச் HD பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

Redmi 10 With Snapdragon 680 SoC Launched in India Price, Specifications

ரெட்மி 10 அம்சங்கள்:

- 6.71 இன்ச் 1600x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4GB LPDDR4X ரேம், 64 GB UFS 2.2 மெமரி
- 6GB LPDDR4X ரேம், 128GB UFS 2.2 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும்  வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 13
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.8
- 2MP டெப்த் கேமரா, f/2.4
- 5MP செல்ஃபி கேமரா
- பின்புறம் கைரேகைசென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ 
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 6000mAh பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 

Redmi 10 With Snapdragon 680 SoC Launched in India Price, Specifications

சியோமி அறிமுகம் செய்து இருக்கும் புதிய ரெட்மி 10 ஸ்மார்ட்போன் பசிபிக் புளூ, கரீபியன் கிரீன் மற்றும் மிட்நைட் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. புதிய ரெட்மி 10, 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 10,999 என்றும் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 12,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் புதிய ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் விற்பனை மார்ச் 24 ஆம் தேதி துவங்குகிறது. இதன் விற்பனை Mi வலைதளம், ப்ளிப்கார்ட், Mi ஹோம் ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது.

அறிமுக சலுகை விவரங்கள்: புதிய ரெட்மி 10 ஸ்மார்ட்போனினை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போதும், மாத தவணை முறை சலுகையை பயன்படுத்தும் போதும் ரூ. 1000 உடனடி தள்ளுபடி பெற முடியும். 

Follow Us:
Download App:
  • android
  • ios