குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்.. வருகிறது Realme 10 5G
இந்தியாவில் விரைவில் ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன. அதில், ரியல்மி 10, ரியல்மி 10 ப்ரோ, ரியல்மி 10 ப்ரோ பிளஸ் வருவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இதோடு 5ஜி ஸ்மார்ட்போனும் வரவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
Realme நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தோனேஷியாவில் Realme 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதன்படி, மொத்தம் மூன்று ஸ்மார்ட்போன்கள் வந்தன. அவை: ரியல்மி 10 4ஜி, ரியல்மி 10 ப்ரோ, ரியல்மி 10 ப்ரோ ப்ளஸ். இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகமாகவுள்ளன.
இந்த நிலையில், ரியல்மி 10 சீரிஸில் புதிதாக 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. அதாவது, ரியல்மி 10 4ஜி ஸ்மாரட்போனில் அதே வசதிகளுடன், 5ஜி சிப் பொருத்தப்பட்டு வரும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், 5G ஸ்மார்ட்போனானது 4G யிலிருந்து மாறுபட்டு ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
அட Xiaomi 13 ஸ்மார்ட்போனில் இத்தனை வசதிகள் வருகிறதா?
Realme 10 5G ஆனது 90Hz பேனல், மீடியா டெக் டைமென்சிட்டி சிப்செட்டைக் கொண்டுள்ளது, இதன் விலை சுமார் ரூ. 15,000 அல்லது குறைவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு கொண்ட Realme 10 5Gயின் விலை சீனாவில் CNY 1,299 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.14,700) விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதே போல், 8ஜிபி ரேம் + 256ஜிபி மாடலின் விலை CNY 1,599 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18,100) விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போன்கள் தங்கம் மற்றும் கருப்பு வண்ணங்களில் வந்துள்ளன.
இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி பிரைமரி டிரிபிள் கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா உள்ளது. 90 ஹெர்ட்ஸ் ரெவ்ரெஷ் ரேட்டுடன் 6.6-இன்ச் நாட்ச் டிஸ்ப்ளே உள்ளது. MediaTek 700 சிப்செட் மற்றும் 5000 mAh பேட்டரி இருப்பதாக தெரிகிறது. அதற்கு ஏற்ப டைப் சி சார்ஜ் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரியல்மி 10 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டதும், வாடிக்கையாளர்கள் Realme ஆன்லைன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஷோ ரூம்களில் வாங்கிக்கொள்ளலாம்.