அட Xiaomi 13 ஸ்மார்ட்போனில் இத்தனை வசதிகள் வருகிறதா?
ஷாவ்மி நிறுவனத்தின் Xiaomi 13 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகவுள்ள நிலையில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையதளங்களில் கசிந்துள்ளன.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி இடத்தில் ஷாவ்மி நிறுவனம் இருந்து வருகிறது. கடந்தாண்டு அறிமுகமான ஷாவ்மி 12 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து அதேபோல் மேம்பட்ட அம்சங்களுடன் ஷாவ்மி 13 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக உள்ளது.
இந்த நிலையில், ஷாவ்மி 13 ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் OnLeaks தளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, ஷாவ்மி 13 சீரிஸ் ஆனது, ஷாவ்மி 13, ஷாவ்மி 13 ப்ரோ என இரண்டு ஸ்மார்ட்போன்களாக அறிமுகம் செய்யப்படுகிறது.
இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் செல்ஃபி கேமராவுக்கான டாப் நாட்ச் ஆனது மத்தியில் இடம்பெற்றுள்ளது. உயர்தர ப்ரீமியம் தோற்றத்தில், வளைந்த முனைகளுடன் காணப்படுகிறது. பெசல் அளவு சுருக்கப்பட்டுள்ளது. அதாவது, ஸ்மார்ட்போன் முழுமையுமாக டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.
பின்புற டிசைன் கிட்டத்தட்ட ஐபோனின் டிசைன் போல் உள்ளது. பின்பக்கத்தில் ஆங்கில எழுத்து L வடிவத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. சக்திவாய்ந்த ஒரு எல்இடி ஃபிளாஷ் லைட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
போனின் இடதுபுறத்தில் பவர் பட்டன், வால்யூம் பட்டன் உள்ளது. மேல் பக்கத்தில் மைக், IR பிளாஸ்டரும், கீழ் பக்கத்தில் ஸ்பீக்கர், இரண்டாம் மைக் ஆகியவை இருப்பதாகவும் தெரிகிறது. நல்ல பளபளப்புடன் கருப்பு, வெள்ளை என இரண்டு நிறங்களில் வருகிறது. மற்ற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் இதில் நாட்ச் அளவு சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் புத்துயிர் பெறும் லாவா நிறுவனம்.. விரைவில் Lava Blaze 5G அறிமுகம்!
இம்மாதம் அறிமுகமாகவுள்ள இந்த ஷாவ்மி 13 ஸ்மார்ட்போனில், ஆண்ட்ராய்டு 13, 2K துல்லியத்தன்மை கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 SoC பிராசசர் ஆகியவை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிராசசரானது ஸ்னாப்டிராகனால் வெளியிடப்பட்ட புத்தம் புதிய பிராசசர் என்பது குறிப்பிடத்தக்கது.