Realme 10 விரைவில் அறிமுகம் !

ரியல்மி நிறுவனம் வரும் நவம்பர் 9 ஆம் தேதியன்று புத்தம் புதிய ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது.
 

Realme going to launch realme 10 Series on 9 November 2022 check expected Features and Specs here

ரியல்மி பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரியல்மி 10 சீரிஸ் தற்போது வரும் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரியல்மியின் சமூகவலைதள பக்கங்களில் டீசர் வெளியாகியுள்ளது. ரியல்மி 10 சீரிஸை 4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டு வகைகளிலும் வெளியிடலாம்.
ரியல்மி 10, ரியல்மி 10 ப்ரோ, ரியல்மி 10 ப்ரோ ப்ளஸ் மற்றும் ரியல்மி 10 ப்ரோ மேக்ஸ் என நான்கு விதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.  ரியல்மி 10 ஸ்மார்ட் போனில்        90Hz ரிப்ரெஷ் ரேட், 6.4 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 99 பிராசஸர், பக்கவாட்டில்  ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 4 ஜிபி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட்,  50 MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 2 MP கேமரா, 16 MP செல்பி கேமரா இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மறுசுழற்சி பொருட்கள், 2 வருட வாரண்டியுடன் Nokia G60 5G அறிமுகம்!

பேட்டரியைப் பொறுத்தவரையில் 5000mAh பேட்டரியும், அதற்கு ஏற்ப 33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரியல்மி யுஐ 3.0·       டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3 யுஎஸ்பி டைப் சி, 3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ வசதி ஆகியவை இருக்கலாம்.
ரியல்மி 10 சீரிஸின் துல்லியமான அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் நவம்பர் 9 இல் நடைபெறும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு நிகழ்வில் வெளிப்படுத்தப்படும். மேலும்,விலை குறித்த தகவல்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios