மறுசுழற்சி பொருட்கள், 2 வருட வாரண்டியுடன் Nokia G60 5G அறிமுகம்!
நோக்கியா நிறுவனம் புதிதாக 2 வருட வாரண்டி, 3 வருட அப்டேட்டுடன் கூடிய Nokia G60 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்குக் காணலாம்.
இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை களைகட்டும் வரும் நிலையில், நோக்கியா நிறுவனம் 30 ஆயிரம் ரூபாய்க்கு 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் மறுசுழற்சி பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், 3 ஆண்டுகள் வரையில் சாப்ட்வேர் அப்டேட் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 50 மெகா பிக்சல் கேமரா, AI டார்க் விஷன், 5MP அல்டரா வைட், 2MP டெப்த் கேமரா, கோ ப்ரோ செயலி வசதி 4,500 mAh பேட்டரி சக்தி, 20 W சார்ஜ்ர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இந்த போனிற்கான முன்பதிவு தற்போது https://www.nokia.com/ என்ற அதிகாரப்பூர் இணையதளத்தில் தொடங்கியுள்ளது, நவம்பர் 7 ஆம் தேதி வரையில் முன்பதிவு நடைபெறுகிறது, அதன் பிறகு விற்பனைக்கு வருகிறது.
WhatsApp Update: இனி உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பலாம்!
எப்படி இருக்கு நோக்கியா ஜி60?
மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் அதிகப்படியான மெகாபிக்சல், பிராசசர் கொண்ட 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஆனால், இந்த நோக்கியா G60 ஸ்மார்ட்போனில் சாதாரணமாக Snapdragon 695 8nm பிராசசர் தான் உள்ளது. ஆனால் விலையோ 30 ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மறுசுழற்சி பொருட்களின் பயன்பாடு, 2 வருட வாரண்டி, 3 ஆண்டுகள் வரையில் சாப்ட்வேர் அப்டேட் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த போனின் விலை 30 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் நிர்ணியக்கப்பட்ட விலைக்கு ஏற்ப, போனிலுள்ள அம்சங்கள் குறைவாகவே உள்ளது. விற்பனைக்கு வரும் போது கூடுதல் சலுகைகள், வங்கி கார்டு ஆஃபர்கள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.