செம்ம டிரிக்ஸ்! எல்லோரும் WhatsApp Web பார்த்தால் கூட, உங்க கண்ணுக்கு மட்டும் தான் மெசேஜ் தெரியும்!!
பொது இடங்களில் கூட வாட்ஸ்அப் வெப் தளத்தை, அனைவரும் பார்க்கும்படி திறந்தால், கூட நீங்கள் மட்டுமே உங்களுடைய மெசேஜை பார்க்கும் வகையில் செய்து கொள்ளலாம். இதை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
பொது இடங்களில் கூட வாட்ஸ்அப் வெப் தளத்தை, அனைவரும் பார்க்கும்படி திறந்தால், கூட நீங்கள் மட்டுமே உங்களுடைய மெசேஜை பார்க்கும் வகையில் செய்து கொள்ளலாம். இதை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். பொதுவாக எல்லோரும் அவர்களுடைய தனிப்பட்ட மெசேஜ்களை யாரும் பார்த்துவிடக்கூடாது என்று நினைப்பார்கள். ஆனால், அலுவலகத்திலோ, அல்லது பொதுவான இடத்திலோ மற்றவர்கள் முன்னிலையில் சில நேரங்களில் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்த நேரிடும். அப்போது நமது சேட் மெசேஜ்களை பிறர் பார்ப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது. இது நமக்கு ஒருவிதமான நெருடலை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: Twitter அலுவலகங்கள் தற்காலிகமாக மூடல்! பணியாளர்கள் ராஜினாமா எதிரொலி!!
இப்படியா சூழலை சமாளிக்கும் வகையில், கூகுள் க்ரோம் எக்ஸ்டென்சில் Privacy Extension For WhatsApp Web என்ற ஒரு எக்ஸ்டென்சன் உள்ளது. இது நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் வெப்பில் எந்த இடத்தில் உங்கள் மவுஸ் கர்சரை வைக்கிறீர்களோ அந்த மெசேஜ் மட்டுமே காட்டும். மற்ற மெசேஜ்களை மங்கலாக்கி விடும். அதாவது, பொது இடங்களில் தனியுரிமையை அதிகரிக்க, இந்த எக்ஸ்டென்சன் உங்கள் செய்திகளையும் பிற அரட்டைகளயும் மங்கலாக்குகிறது.
மேலும், உங்கள் மவுஸ் கர்சரைக் கொண்டு அதன் மேல் செல்லும் போது அந்த ஒரு மெசேஜ் மட்டும் காட்டப்படும். கூடுதலாக, கீபோர்டு குறுக்குவழியைப் பயன்படுத்தி அல்லது எக்ஸ்டென்சன் மெனுவில் உள்ள பிற பட்டனைக் கிளிக் செய்து உங்கள் வசதிக்கு ஏற்ப விரைவாக மாற்றலாம். வாட்ஸ்அப்பில் நீங்கள் எந்த பகுதியை மங்கலாக்க விரும்புகிறீர்கள் என்பதைத் முடிவுசெய்ய அனுமதிக்கலாம். அவ்வா செய்வதன் மூலம் இந்த எக்ஸ்டென்சன் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கிறது.
இதையும் படிங்க: Twitter-ல் இருந்து மொத்தமாக ராஜினாமா செய்யும் பணியாளர்கள்! Elon Musk பதில்..
வாட்ஸ்அப் பிரைவசி எக்ஸ்டென்சனில் உள்ள பலன்கள்:
- உங்கள் திரையில் அனைத்து மெசேஜ்களையும் மங்கலாக்கும்.
- இடதுபுறத்தில் உள்ள கடைசியாக அனுப்பிய மெசேஜ்களின் ப்ரிவியூ காட்டப்படம் இடத்தையும் மங்கலாக்கும்.
- அனைத்து படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள், என மெசேஜ்களில் உள்ள அனைத்தையும் மங்கலாக்கும்.
- அனைத்து சுயவிவரப் படங்களையும் மங்கலாக்கும்.
மேலும் உள்ள பயன்பாடுகளை் குறித்த விரிவான பட்டியலை https://pfwa.lukaslen.com/ என்ற பக்கத்தில் காணலாம். மேற்கண்ட இந்த எக்ஸ்டென்சன் உங்களைப் பற்றிய அல்லது உங்கள் செய்திகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்காது என்று தெரிவித்துள்ளது. சிக்கல்கள் அல்லது புதுப்பிப்புகள் பற்றிய தகவலைக் காண்பிக்க மட்டுமே சேவையகத்துடன் தொடர்பு கொள்வதாக கூறியுள்ளது. மேலும் அறிய, எகஸ்டென்சன் தளத்தில் உள்ள தனியுரிமைக் கொள்கையைப் பார்வையிடவும்.