Poco தனது புதிய C-சீரிஸ் மாடலான Poco C85 5G-ஐ டிசம்பர் 9 அன்று இந்தியாவில் வெளியிட உள்ளது. 6000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டூயல் ரியர் கேமரா போன்ற அம்சங்களுடன் இந்த போன் Flipkart-ல் விற்பனைக்கு வரும்.

மலிவான ஸ்மார்ட்போன் பிராண்டாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட Poco, தனது C தொடர்-இன் புதிய மாடலான Poco C85 5G-ஐ இந்தியாவில் வெளியிட தயாராக உள்ளது. டிசம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படவுள்ள இந்த போன், Flipkart மூலம் விற்பனைக்கு வரும். ஃப்ளிப்கார்ட் தளத்தில் இந்த மாடலுக்கான தனிப் பக்கமும் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருப்பதால், முக்கிய அம்சங்கள் வெளியாகிவிட்டன.

அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி & டிசைன் விவரம்

Poco C85 5G டிசம்பர் 9ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகமாகிறது. ஃப்ளிப்கார்டில் வெளியிடப்பட்ட படத்தில், இந்த மாடல் டூயல் ரியர் கேமரா வடிவமைப்புடன் வரும் என்பது உறுதியாகியுள்ளது. முன்புறத்தில் வாட்டர்டிராப் டிஸ்ப்ளே நாட்ச் இருக்கும், அதில் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. C சீரிஸ் மாடல்கள் பொதுவாக ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை விலையில் இருப்பதால், இந்த மாடலும் அதே வரம்பில் இருக்கும் வாய்ப்பு அதிகம். ஆனால், சரியான விலை விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பேட்டரி மற்றும் சார்ஜிங்

Poco C85 5G-ன் முக்கிய சிறப்பு 6000mAh பெரிய பேட்டரி. இதற்கு 33W வேகமாக சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு உள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, 33W சார்ஜிங் மூலம் 1% முதல் 50% வரை பேட்டரியை 28 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். தற்போது பேட்டரி பற்றிய விவரங்களே உறுதியானதாக வெளிவந்துள்ளன.

எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்கள்

இந்த மாடல் 50MP AI பிரதான கேமரா சென்சாருடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், MediaTek Dimensity 6100+ அக்டா-கோர் செயலி, 4GB RAM மற்றும் Android 16 ஆதரவு என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. Google Play Console-ல் (மாடல்: 2508CPC2BI) இந்த போன் பதிவு செய்யப்பட்டுள்ளது.