ஒப்போ ரெனோ 14 5ஜி தீபாவளி பதிப்பு, இந்தியப் பண்டிகைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன் ஆகும். இதன் சக்திவாய்ந்த கேமரா அமைப்பு, நீண்ட நேரம் நீடிக்கும் 6000mAh பேட்டரி ஆகியவை இதனை ஒரு சிறந்த பண்டிகைக்கால பரிசாக மாற்றுகிறது.
தீபாவளி என்பது விளக்குகளின் திருவிழா, மகிழ்ச்சி மற்றும் அர்த்தமுள்ள பரிசுகளின் நேரம். தனித்துவமான மற்றும் நினைவில் நிற்கக்கூடிய ஒரு பரிசைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவால்தான். நாம் கொடுக்கும் பரிசுகள் சிந்திக்க வைப்பதாகவும், ஸ்டைலாகவும், நீண்ட காலம் நீடிப்பதாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் பண்டிகையின் ஆன்மாவை பிரதிபலிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.
ஒப்போ ரெனோ 14 5ஜி (OPPO Reno14 5G) தீபாவளி பதிப்பு இந்த அனைத்து அம்சங்களையும் ஒரு அற்புதமான ஸ்மார்ட்போனில் இணைத்துள்ளது. பிரத்யேகமாக இந்தியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த Reno14 தொடரின் சிறப்பு பதிப்பு ஒரு சாதனம் மட்டுமல்ல. அது கையிலேயே ஒரு கொண்டாட்டம் போல உணர வைக்கிறது. பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட அழகான வடிவமைப்புடன், டெக் துறையில் முதன்முறையாக வெப்பத்தை உணர்ந்து நிறம் மாறும் கோட்டிங்குடன் தீபாவளியின் ஒளியையும் அற்புதத்தையும் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது.

தனித்துவமான வடிவமைப்பு, தொழில்துறையில் முதல் புதுமையுடன்
Reno14 5G தீபாவளி பதிப்பு, இந்திய பண்டிகை உணர்வை அர்த்தமுள்ளதாக உணரவைக்கும் வடிவமைப்பு மூலம் கொண்டாடுகிறது. இந்த சிறப்பு மேம்படுத்தல் போனின் பின் கவரில் உள்ளது. தீபாவளியை முன்னிட்டு, OPPO பின் பேனலை ஒரு கிரியேட்டிவ் கேன்வாஸாக மாற்றி, பாரம்பரிய கூறுகளை இணைத்து பண்டிகை உணர்வு வெளிப்படும்படி வடிவமைத்துள்ளது.
பின் பேனல் பாரம்பரிய கலைகளால் ஈர்க்கப்பட்ட வடிவங்களைக் கொண்டுள்ளது. நுணுக்கமான விவரங்களுடன் ஒரு அழகான மயில் உள்ளது. இவற்றைச் சுற்றி சுடர் வடிவங்கள் உள்ளன. அவை தீபாவளியின் போது வீடுகளை ஒளிரச் செய்யும் தீபங்களை நினைவூட்டுகின்றன என்றே கூறலாம். பண்டிகையை அரவணைப்புடனும், மகிழ்ச்சியுடனும் நிரப்புகின்றன.
இந்த முழு வடிவமைப்பும் கருப்பு மற்றும் தங்க வண்ணங்களின் கலவையில் உள்ளது. அடர் கருப்பு பின்னணி அமாவாசை இரவைக் குறிக்கிறது, தங்க நிற ஹைலைட்கள் இருளை அகற்றும் தீபங்களின் ஒளியைப் போல பிரகாசித்து, தீபாவளியின் செய்தியைப் பிரதிபலிக்கின்றன.
இந்த வண்ணத் திட்டம் OPPO-வின் தொழில்துறையில் முதல் வெப்பத்தை உணர்ந்து நிறம் மாறும் தொழில்நுட்பத்திற்குப் பொருந்துகிறது. GlowShift தொழில்நுட்பத்தின் மூலம், பின் பேனல் உடல் வெப்பநிலையைப் பொறுத்து அடர் கருப்பு நிறத்தில் இருந்து பளபளக்கும் தங்கமாக மாறுகிறது. இந்த மாற்றம் பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது. 28°C-ல் போன் கருப்பாகவும், 29–34°C-க்கு இடையில் நிறம் மாறத் தொடங்குகிறது, 35°C-க்கு மேல் முற்றிலும் தங்கமாக மாறுகிறது.
OPPO-வின் படி, இந்த தொழில்நுட்பம் ஆறு சிக்கலான செயல்முறைகள், மூன்று அடுக்குகள் மற்றும் ஒன்பது-அடுக்கு லேமினேஷன் நுட்பத்துடன் சாத்தியமாகியுள்ளது. மைக்ரான் அளவிலான துல்லியத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த வெப்பத்தை உணரும் பொருள் குறைந்தது 10,000 முறை நிறம் மாறும் திறன் கொண்டது.

நேர்த்தியான, வலுவான வடிவமைப்பு
OPPO Reno14 5G தீபாவளி பதிப்பு வடிவமைப்பு புதுமையால் கவர்ந்தாலும், அதன் உள்ளே இருக்கும் அம்சங்களும் சக்தி வாய்ந்தவை ஆகும். வெறும் 7.42mm தடிமன் மற்றும் 187 கிராம் எடையுடன் இது மெல்லியதாகவும், இலகுவாகவும் இருக்கிறது. கையில் வசதியாகப் பிடிக்கலாம். இந்த தீபாவளிக்கு எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்லலாம்.
பெரிய 6.59 அங்குல AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1,200 நிட்ஸ் பிரகாசத்துடன் பண்டிகை வண்ணங்களையும், ஒளிகளையும் தெளிவாகக் காட்டுகிறது. 93% ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன், வீட்டிலோ அல்லது வெளியிலோ ஒரு ஆழமான அனுபவத்தை அளிக்கிறது, உங்கள் உறவினர்களுடன் தனிப்பட்ட தொடர்பை உருவாக்குகிறது.
பிரீமியம் வடிவமைப்பு வலுவாக உள்ளது, OPPO-வின் ஏரோஸ்பேஸ்-கிரேடு அலுமினியம் ஃபிரேம் காரணமாக. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i மற்றும் ஆல்-ரவுண்ட் ஆர்மர் கட்டமைப்பு, அதிர்ச்சிகளையும், தற்செயலான வீழ்ச்சிகளையும் தாங்கக்கூடியது.
கூடுதலாக, IP66, IP68, மற்றும் IP69 சான்றிதழ்கள் உள்ளன. எனவே நீர் துளிகள், தெறிப்புகள், உயர் அழுத்த நீர், மற்றும் சூடான நீரையும் தாங்கக்கூடியது ஆகும்.
தீபாவளி விளக்குகள், போர்ட்ரெய்ட்களுக்கான சரியான கேமரா
OPPO Reno14 5G தீபாவளி பதிப்பு, தீபாவளியை சிறப்பிக்கும் தருணங்களைப் படம்பிடிக்க ஒரு அற்புதமான தேர்வாகும். போர்ட்ரெய்ட்கள் மற்றும் தீபங்களின் புகைப்படங்களில் இது அற்புதமாகச் செயல்படுகிறது.
கேமரா யூனிட்டில்:
50MP பிரதான சென்சார்
50MP டெலிஃபோட்டோ லென்ஸ் (3.5x ஆப்டிகல் ஜூம் உடன்)
8MP அல்ட்ரா-வைட் லென்ஸ்
50MP செல்ஃபி கேமரா உள்ளன.
3.5x டெலிஃபோட்டோ லென்ஸ் மூலம் பண்டிகை உடை போர்ட்ரெய்ட்களை எடுக்கலாம். Triple Flash Array தொழில்நுட்பம் குறைந்த ஒளியிலும் தெளிவான புகைப்படங்களை வழங்குகிறது.
4K HDR வீடியோ (60fps) பிரதான, டெலிஃபோட்டோ மற்றும் முன் லென்ஸ்களில் கிடைக்கிறது. புகைப்படங்களை மேம்படுத்த AI Recompose, AI Best Face, AI Perfect Shot, AI Eraser, AI Reflection Remover போன்ற AI கருவிகள் உள்ளன.

தடையற்ற செயல்திறன், நீண்ட கால பேட்டரி, ஸ்மார்ட் AI ஆதரவு
MediaTek Dimensity 8350 சிப்செட் உடன் Reno14 5G தீபாவளி பதிப்பு வேகமான செயல்திறன் மற்றும் மேம்பட்ட ஆற்றல் செயல்திறனை வழங்குகிறது. லேக் இல்லாமல் பாடல்கள், ஷாப்பிங், புகைப்படங்கள் இடையே மாறலாம்.
6000mAh பேட்டரி இரண்டு நாட்கள் வரை நீடிக்கும். 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் ஐந்து ஆண்டுகள் வரை பேட்டரி ஆயுள் இருக்கும். AI HyperBoost 2.0, AI LinkBoost 3.0 ஆகியவற்றால் நெரிசலான நெட்வொர்க்குகளிலும் நிலையான இணைப்பு கிடைக்கும். ColorOS 15, டிரினிட்டி இன்ஜின், மற்றும் லுமினாஸ் ரெண்டரிங் இன்ஜின் மென்மையான அனிமேஷன்களை வழங்குகிறது. மேலும் இதில் AI டிரான்ஸ்லேட், வாய்ஸ் ஸ்கிரைப், மைண்ட் ஸ்பேஸ் போன்ற கருவிகளும் உள்ளன.
விலை, சலுகை விவரங்கள்
OPPO Reno14 5G தீபாவளி பதிப்பு (8GB + 256GB) ரூ.39,999-க்கு கிடைக்கிறது. பண்டிகைக்கால சலுகையில் குறைந்தபட்சம் ரூ.36,999-க்கு வாங்கலாம். இது சில்லறை விற்பனை நிலையங்கள், OPPO இ-ஸ்டோர், Flipkart, மற்றும் Amazon-ல் கிடைக்கும்.

சிறந்த பண்டிகைக்கால தேர்வு
அற்புதமான கேமராவுடன் பெயர் பெற்ற OPPO Reno14 5G, இப்போது தீபாவளியின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் வடிவமைப்புடன் வருகிறது. இந்திய பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட மோட்டிஃப்கள் மற்றும் நிறம் மாறும் கோட்டிங் மகிழ்ச்சியையும், பண்டிகையையும் பிரதிபலிக்கின்றன. வலுவான பாடி, நீர் எதிர்ப்பு, சக்திவாய்ந்த சிப்செட், மற்றும் ஸ்மார்ட் AI கருவிகளுடன் இது பண்டிகைக்கு பரிசாகவோ அல்லது மேம்படுத்தலுக்கோ ஒரு அற்புதமான தேர்வாகும்.
பண்டிகையை மேலும் மகிழ்ச்சியாக மாற்ற 6 மாதங்கள் வரை No Cost EMI, ரூ. 3,000 வரை 10% உடனடி கேஷ்பேக் (கிரெடிட் கார்டு EMI-ல்), ரூ. 2,000 (கிரெடிட் கார்டு Non-EMI-ல்) தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி பார்ட்னர்கள் மூலம் கிடைக்கிறது.
கூடுதலாக ஜீரோ டவுன் பேமெண்ட் (8 மாதங்கள் வரை), ரூ. 3,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், கூகுள் 2TB கிளவுட் (3 மாதங்கள், ஜெமினி அட்வான்ஸ்டு – ரூ. 5,200 மதிப்பு), 6 மாதங்களுக்கு 10 OTT ஆப்களின் பிரீமியம் அணுகல் (Jio ₹1199 ப்ரீபெய்ட் திட்டம் மூலம்) ஆகியவை கிடைக்கும்.
