நிலவில் போராடி தாக்குப்பிடித்த ஒடிசியஸ் லேண்டர்... கடைசி நிமிடத்தில் நடக்கப்போவது என்ன?
ஒடிசியஸுடனான தொடர்பு திங்கட்கிழமை துண்டிக்கப்படலாம் என்று கருதப்பட்டது. ஆனால், பேட்டரி தீர்ந்துபோவதற்கு முந்தைய கடைசி சில மணிநேரங்கள் வரை ஒடிசியஸ் லேண்டர் செயல்பாட்டில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
1972ஆம் ஆண்டுக்குப் பிறகு சந்திரனில் தரையிறங்கிய முதல் அமெரிக்க விண்கலமான ஒடிசியஸ், நிலவில் ஐந்தாவது நாளில் தனது முடிவை நெருங்கி வருகிறது. ஒடிசியஸ் லேண்டரின் பேட்டரி இறுதி சில மணிநேரத்தில் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்று இன்டியூட்டிவ் மெஷின்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
டெக்சாஸை தளமாகக் கொண்ட இன்டியூட்டிவ் மெஷின்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ஹூஸ்டனில் உள்ள கட்டுப்பாட்டு மையம் லேண்டருடன் தொடர்பில் இருப்பதாகக் கூறியது. தனது பணி நோக்கங்களுக்கு ஏற்ப லேண்டரில் உள்ள பேலோட் அறிவியல் தரவு மற்றும் படங்களை அனுப்பி திறமையாக செயல்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
விண்கலம் கடந்த வியாழன் அன்று நிலவின் மேற்பரப்பை அடைந்தது. ஒடிசியஸ் லேண்டர் பக்கவாட்டில் சாய்ந்த நிலையில் தரையிறங்கியது. இதனால் அதன் தகவல் தொடர்பு மற்றும் சோலார் சார்ஜிங் திறன்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மனிதப் பிழைதான் இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்று இன்டியூட்டிவ் மெஷின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏவப்படுவதற்கு முன் ஒரு பாதுகாப்பு சுவிட்சை இயக்க லேண்டர் கட்டுப்பாட்டு குழு தவறிவிட்டது என்றும் இது லேண்டரைத் தொடர்ந்து கட்டுப்படுத்துவதைத் தடுக்கிறது என்றும் கூறியது. லேண்டர் நிலவின் சுற்றுப்பாதையில் இருந்தபோதும் அவசரமாக ஒரு மாற்றத்தைச் செய்யவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்குச் செல்லும் 4 பேர் யார்? கேரளாவில் அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி!
இன்டியூட்டிவ் மெஷின்ஸ் நிறுவன நிர்வாகி அதிகாரி ஒருவர் சனிக்கிழமை செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவதற்காக, லேசர் அமைப்பை நிறுத்துவதற்கான முயற்சியின்போது பாதுகாப்பு சுவிட்ச் செயலிழந்தது என்று கூறியுள்ளார்.
ரேஞ்ச் ஃபைண்டர்களின் தோல்வி மற்றும் கடைசி நிமிடத்தில் ஒரு பணியை மாற்றியது ஆகிய காரணங்களால் ஒடிசியஸ் ஆஃப்-கில்டர் முறையில் தரையிறங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை விண்கலத்தின் இரண்டு தகவல் தொடர்பு ஆண்டெனாக்கள் செயலிழந்துவிட்டதாகவும், தவறான வழியைச் சுட்டிக்காட்டியதாகவும் இன்டியூட்டிவ் மெஷின்ஸ் கூறியிருக்கிறது. சோலார் பேனல்கள் தவறான திசையில் இருப்பதால் பேட்டரியை ரீசார்ஜ் செய்யும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இன்டியூட்டிவ் மெஷின்ஸ் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, செவ்வாய்க்கிழமை காலை ஒடிசியஸுடனான தொடர்பு துண்டிக்கப்படலாம் என்று இன்டியூட்டிவ் மெஷின்ஸ் கருதியது. ஆனால், பேட்டரி தீர்ந்துபோவதற்கு முந்தைய கடைசி சில மணிநேரங்கள் வரை ஒடிசியஸ் லேண்டர் செயல்பாட்டில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
நாசா மற்றும் பல வணிக வாடிக்கையாளர்களுக்காக ஒரு டஜன் அறிவியல் கருவிகள் கொண்ட ஒடிசியஸ் 7 முதல் 10 நாட்களுக்கு சிலவில் செயல்படும் திட்டம் கொண்டிருந்தது.
துல்லியமான கேமரா... தூள் கிளம்பும் டிசைன்... iQOO Z9 5G மொபைல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!