Asianet News TamilAsianet News Tamil

துல்லியமான கேமரா... தூள் கிளம்பும் டிசைன்... iQOO Z9 5G மொபைல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்தியாவில் iQOO Z9 5G மொபைல் மார்ச் 12 அன்று வெளியிடப்பட உள்ளது. இதன் விலை ரூ.20,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

iQOO Z9 5G to launch in India on March 12 and its design and camera details have already been revealed sgb
Author
First Published Feb 27, 2024, 2:33 PM IST | Last Updated Feb 27, 2024, 2:40 PM IST

iQOO தலைமை நிர்வாக அதிகாரி நிபுன் மரியா இந்தியாவில் iQOO Z9 5G மொபைலை அறிமுகப்படுத்தினார். மார்ச் 12 அன்று இந்த மொபைல் போன் வெளியிடப்பட உள்ளது. இந்தச் செய்தியை மரியா தனது ட்விட்டர் பதிவில் அறிவித்தார்.

அதனுடன் டீஸர் படமும் ஃபோனைப் பற்றிய சில வடிவமைப்பு மற்றும் கேமரா விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது. டீஸர் படம் படத்தின் மூலம் இந்த மொபைல் பச்சை நிறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டதாக இருப்பது தெரிகிறது. லென்ஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) அம்சத்துடன் கேமரா அமைப்பு உள்ளது.

இதற்காக பிரத்யேக 'ஆஸ்பெரிகல் பிரீமியம் லென்ஸ்' உள்ளது. இந்த வகை லென்ஸ்கள் மொபைல் போட்டோகிராஃபியில் படங்களை தெளிவாக்கப் பதிவுசெய்ய பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இது படத்தில் தேவையற்ற வண்ணங்களைக் குறைக்க உதவுகிறது. இருப்பினும், இந்த லென்ஸ்களை தயாரிப்பது கடினம், விலையும் அதிகம்.

வெறும் ரூ.6,249 க்கு பக்காவான ஸ்மார்ட்போன்! பட்ஜெட் மொபைல் சந்தையில் அலப்பறை கிளப்பும் மோட்டோ!

iQOO Z9 5G to launch in India on March 12 and its design and camera details have already been revealed sgb

iQOO Z9 5G டீஸர் ஸ்மார்ட்போன் தட்டையான விளிம்புகள் மற்றும் பிளாட் டிஸ்ப்ளேவுடன் வரும் என்பதை உறுதிப்படுத்துகிறது. போனின் பின்புறத்தில் மேட் பேனலில் டூயல்-டோன் டிசைனைக் கொண்டுள்ளது. அமேசான் வழியாக ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட உள்ளது.

50-மெகாபிக்சல் Sony IMX882 முதன்மை கேமரா, MediaTek Dimensity 7200 பிராசஸர் மூலம் இயங்கும் இந்த மொபைலின் விலை குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஆனால் iQOO Z7 5G இன் விலையைப் பார்க்கும்போது, ​​iQOO Z9 ரூ.20,000-க்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

iQOO நவம்பர் 2023 இல், iQOO 12 மொபைலை அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 2024 இல் iQOO Neo 9 Pro அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது iQOO Z9 5G மார்ச் 2024 இல் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது. முந்தைய மொபைல் மாடல்களைப் பார்க்கும்போது போட்டோ எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு iQOO 12 சிறந்த தேர்வாக இருக்கும் என்று சொல்லலாம்.

அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் Gulf Ticket! தமிழர் உள்பட 667 பேருக்கு அடித்த ஜாக்பாட்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios