வங்கி விவரம் எதையும் உளறவில்லை... ஆனா அக்கவுண்டல ரூ.4 லட்சம் குறையுது! இப்படியும் மோசடி நடக்குமா?
ராஜ்புத் பாஸ்டவேட், OTP அல்லது நெட் பேங்கிங் விவரங்களை யாரிடமும் பகிரவில்லை. சந்தேகத்திற்குரிய எந்த இணைப்பையும் கிளிக் செய்யவில்லை. இருப்பினும் அவரது கணக்கில் ரூ.3.95 லட்சத்தை மோசடிப் பேர்வழிகள் அபேஸ் செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் தோல்கா நகரில் வசிக்கும் ஒருவர், தனது வங்கி விவரங்களைப் யாரிடமும் பகிரவில்லை. மோசடிக்காரர்கள் அனுப்பும் லிங்க் எதையும் கிளிக் செய்யவில்லை. ஆனாலும், அவர் தனது கணக்கில் இருந்து ரூ.3.95 லட்சத்தை இழந்திருக்கிறார்.
53 வயதான பூஷன் ராஜ்புத் என்பவர் சயின்ஸ் சிட்டி சாலையில் உள்ள பார்க்வியூ சொசைட்டியில் வசிக்கிறார். ஒரு புகழ்பெற்ற மருந்து நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். இவர் தனது கணக்கில் இருந்து சுமார் 4 லட்சம் ரூபாய் பறிபோனது பற்றி போடக்தேவ் பொலிஸாரிடம் புகார் கூறியுள்ளார்.
அவரது புகாரில் கூறியுள்ளபடி, ஏப்ரல் 8ஆம் தேதி, எஸ்பிஐ நெட் பேங்கிங்கில் இருந்து இவருக்கு 8,400 ரூபாய் வெகுமதி கிடைத்துள்ளது என்று அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து மெசேஜ் வந்துள்ளது. அந்த வெகுமதி தொகையை பெறுவதற்கு ஏப்ரல் 8ஆம் தேதி காலக்கெடு உள்ளது என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
ராஜ்புத் அந்த மெசேஜில் இருந்த லிங்க்கை கிளிக் செய்யவில்லை. அன்று மாலை 4.53 மணியளவில், தெரியாத எண்ணில் இருந்து அவருக்கு மற்றொரு செய்தி வந்ததுள்ளது. அதில் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ.24,500 கழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைக் கண்ட ராஜ்புத் உடனடியாக வங்கி மேலாளரை அழைத்து விவரத்தைத் தெரிவித்துள்ளார்.
5,785 கோடி சொத்து... நாட்டின் நம்பர் 1 பணக்கார வேட்பாளர்! இவர் யாருன்னு தெரியுமா?
மேலாளர் அவரது கணக்கை பரிசோதித்துவிட்டு, கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லையே என்று கூறியுள்ளார். இருப்பினும், பாதுகாப்புக்காக ராஜ்புத் தனது கணக்கை பிளாக் செய்துவிட்டார். ஏப்ரல் 12ஆம் தேதி, ராஜ்புத் வங்கிக்குச் சென்று விசாரித்துள்ளார். அப்போதும் அவரது கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளனர்.
எனவே, அவர் தனது சேமிப்புக் கணக்கை சரிபார்த்தார். அதில் எந்தப் பரிவர்த்தனையும் நடக்கவில்லை என்று உறுதியானது. ஆனால் அவரது வீட்டுக் கடன் கணக்கில் ரூ.3.95 லட்சம் குறைந்திருந்தது. உடனே ராஜ்புத் போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.
ராஜ்புத் தனது புகாரில், தான் பாஸ்டவேட், OTP அல்லது நெட் பேங்கிங் விவரங்களை யாரிடமும் பகிரவில்லை என்றும், சந்தேகத்திற்குரிய எந்த இணைப்பையும் கிளிக் செய்யவில்லை என்றும் உறுதியாகக் கூறியுள்ளார். இருப்பினும் அவரது கணக்கில் ரூ.3.95 லட்சத்தை மோசடிப் பேர்வழிகள் அபேஸ் செய்துள்ளனர்.
இது தொடர்பாக போடக்தேவ் போலீசார் ஐபிசி மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்க கிட்ட இருக்குற தங்கம் ஒரிஜினலான்னு தெரியுமா? ஈசியா கண்டுபிடிக்கும் வழி இதோ!