Asianet News TamilAsianet News Tamil

பக்கா ஸ்கெட்ச் போட்டு பணம் பறிக்கும் ஆண்ட்ராய்டு மால்வேர்... மைக்ரோசாப்ட் வெளியிட்ட ஷாக் தகவல்..!

டைனமிக் கோட் லோடிங் முறையை செயல்படுத்தி பிரீமியம் சேவைகளுக்கான சந்தாவுக்கு தானாக பணம் எடுத்துக் கொள்கின்றன.

new Android malware found to auto-subscribe premium services by stealing OTP
Author
India, First Published Jul 3, 2022, 7:33 PM IST

ஆண்ட்ராய்டு தளத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் புது மால்வேர் பயனருக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மால்வேர் பயனர் பயன்படுத்தி வரும் சேவைகளின் பிரீமியம் சந்தாவுக்கு தானாக கட்டணம் செலுத்துவது கண்டறியப்பட்டு உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செக்யுரிட்டி பிரிவு இந்த மால்வேர் பற்றிய தகவல்களை தெரிவித்து இருக்கிறது. 

சூப்பர் ஆஃபர்கள்... மிட் ரேன்ஜ் பிரிவில் புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்... விற்பனை எப்போ தெரியுமா?

இந்த மால்வேர் ஆனது வழக்கமாக செயலிகளில் இருக்கும் டோல் பிராட்ஸ் (toll frauds) என வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இவை டைனமிக் கோட் லோடிங் முறையை செயல்படுத்தி பிரீமியம் சேவைகளுக்கான சந்தாவுக்கு தானாக பணம் எடுத்துக் கொள்கின்றன. அதுவும் பயனர் அதற்கு முன் பயன்படுத்தாத சேவைகளுக்கு இவ்வாறு செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உஎள்ளது.

லெய்காவுடன் கூட்டணி.. வேற லெவல் கேமராவுடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்..!

மாதாந்திர டெலிகாம் கட்டணம்:

ஆண்ட்ராய்டு மால்வேர், உங்கள் அக்கவுண்டில் சப்ஸ்க்ரிப்ஷன் செய்து விடும். அதன் பின் இதற்கான கட்டணம் டெலிகாம் சேவையின் மாதாந்திர கட்டணத்தில் சேர்க்கப்பட்டு விடுகிறது. இதன் காரணமாக உங்கள் அக்கவுண்டில் பில் தொகை அதிகரிக்கலாம். பரிமாற்றங்கள் உங்கள் அக்கவுண்ட் மூலம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால், அதற்கான தொகையை நீங்களே செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும். 

மின் கட்டணம் செலுத்துங்க... பொது மக்களிடம் லட்சக் கணக்கில் மோசடி செய்த ஹேக்கர்கள்..!

new Android malware found to auto-subscribe premium services by stealing OTP

மால்வேர் ஆனது, முதலில் பயனரின் மொபைலில் வைபை நெட்வொர்க்-ஐ ஆப் செய்து விட்டு, செல்லுலார் நெட்வொர்க் தேர்வு செய்து, வயர்லெஸ் அப்லிகேஷன் ப்ரோடோகாலை (WAP) முறியடிக்கும். இந்த சூழலில், செல்லுலார் நெட்வொர்க் கிடைக்கும் வரை மால்வேர் காத்திருக்கும். செல்லுலார் நெட்வொர்க் கிடைத்ததும், பயனருக்கு தெரியாமலேயே பின்னணியில் பிரீமியம் அக்கவுண்ட் சந்தாவை செயல்படுத்தி விடும். 

தொழில்நுட்ப திருட்டு:

இதன் பின் டைனமிக் கோட் லோடிங், அதாவது பண பரிமாற்ற வலைப்பக்கத்தை தானாக இயக்கும் முறை மூலம் பயனர் அக்கவுண்டில் இருந்து பணம் செலுத்தும். பணம் செலுத்த முற்படும் போது உங்களுக்கு வரும் ஒ.டி.பி.-யை நோட்டிபிகேஷன் பேனலில் இருந்து மறைத்து விடும். இதை தொடர்ந்து எலிவேடெட் சிஸ்டம் பிரிவிலிஜ் அக்சஸ் மூலம் பாஸ்வேர்டை பெற்று செல்லுலார் நெட்வொர்க் பில்லில் இணைத்து விடும். 

இது போன்ற மால்வேர் கூகுள் பிளே ஸ்டோருக்கு வெளியே கிடைக்கும் உள்ள ஏராளமான செயலிகளில் பெரும் அளவில் வினியோகிக்கப்பட்டு இருப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் இல்லாமல் வெளியில் இருந்து டவுன்லோட் செய்து இருந்தால், இந்த மால்வேர் உங்களை ஏமாற்றி, தகவல்கள் மற்றும் பணத்தை பறிக்கவும் அதிக வாய்ப்புகள் உண்டு. 

Follow Us:
Download App:
  • android
  • ios