Asianet News TamilAsianet News Tamil

லெய்காவுடன் கூட்டணி.. வேற லெவல் கேமராவுடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்..!

சியோமி 12S, சியோமி 12S ப்ரோ மற்றும் சியோமி 12S அல்ட்ரா உள்ளிட்டவை ஜூலை 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருந்தது.

Xiaomi 12S Ultra to launch with Sony IMX989 sensor on July 4
Author
India, First Published Jun 30, 2022, 10:13 PM IST

சியோமி நிறுவனம் ஜூலை 4 ஆம் தேதி புதிய 12 சீரிஸ் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஃபிளாக்‌ஷிப் மாடல்களின் வெளியீட்டை முன்னிட்டு அவற்றுக்கான டீசர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் புது டீசரில் சியோமி 12S அல்ட்ரா ஸ்மார்ட்போன் 1 இன்ச் டைப் கேமரா சென்சார் கொண்டு இருக்கும் என தெரியவந்து உள்ளது.

இதையும் படியுங்கள்: இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் நார்டு 2t வெளியீட்டு தேதி - விலை எவ்வளவு தெரியுமா?

இந்த சென்சார் சோனி நிறுவனம் உருவாக்கியது ஆகும். இந்த சென்சார் சைஸ் சோனி நிறுவனத்தின் புதிய IMX989 சென்சாரில் பயன்படுத்தப்பட்டு இறுக்கிறது. 

இதையும் படியுங்கள்: சாம்சங் போனிற்கு அதிரடி விலை குறைப்பு அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா?

“சியோமி 12S அல்ட்ரா மாடலில் சோனி IMX989 சென்சார் வழங்கப்படும். இது சோனி நிறுவனத்தின் பெரிய இமேஜ் சென்சார் ஆகும். இந்த சென்சார் ஃபோக்கஸ் வேகத்தை அதிகப்படுத்தி, சிறப்பான டைனமிக் ரேன்ஜ் பெற உதவும். இது பற்றிய கூடுதல் விவரங்கள் ஜூலை 4 ஆம் தேதி இரவு 7 மணிக்கு #Xiaomi12SSeriesLaunch நிகழ்வில் அறிவிக்கப்படும்,” என சியோமி இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது.

இதையும் படியுங்கள்: அசத்தல் அம்சங்கள், ஸ்டைலிஷ் டிசைன்.. மிட் ரேன்ஜ் பிரிவில் புது நோக்கியா போன் அறிமுகம்..!

முன்னதாக சியோமி நிறுவனம் மூன்று ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் - சியோமி 12S, சியோமி 12S ப்ரோ மற்றும் சியோமி 12S அல்ட்ரா உள்ளிட்டவை ஜூலை 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருந்தது. சியோமி நிறுவனத்தின் புதிய 12S சீரிஸ் மாடல் ஜெர்மன் நாட்டு கேமரா நிறுவனமான லெய்கா உடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. கேமரா நிறுவனத்துடன் இணைந்து சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் உருவாக்கி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். 

“மிக கடின உழைப்புக்கு பின், நாங்கள் எங்களின் புதுமையை பகிர்ந்து கொள்கிறோம், சியோமி ஸ்மார்ட்போன் மாடல்கள் லெய்காவுடன் இணைந்து உருவாக்கப்பட்டு உள்ளன. இவை அடுத்த தலைமுறை கேமரா தொழில்நுட்பம் கொண்டவை ஆகும். இது பற்றி அதிக விவரங்களை #Xiaomi12SSeriesLaunch நிகழ்வில் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறோம்,” என சியோமி நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

சியோமி நிறுவனத்தின் புதிய 12s சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அந்த நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த சியோமி Mi 11 அல்ட்ரா மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய சியோமி 12s ப்ரோ மற்றும் சியோமி 12s அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல்கள் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டு இருக்கும் என தெரிகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios