அசத்தல் அம்சங்கள், ஸ்டைலிஷ் டிசைன்.. மிட் ரேன்ஜ் பிரிவில் புது நோக்கியா போன் அறிமுகம்..!
இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு சாப்ட்வேர் அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா G11 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக நோக்கியா G11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய நோக்கியா G11 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்: இனி அந்த கவலை வேண்டாம்... விரைவில் வாட்ஸ்அப் வரும் புது அம்சம்...!
சிறப்பம்சங்களை பொருத்த வரை நோக்கியா G11 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வி நாட்ச் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் T606 பிராசஸர், 4GB ரேம், 64GB மெமரி, ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு சாப்ட்வேர் அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது.
இதையும் படியுங்கள்: மிகக் குறைந்த விலையில் சாம்சங் போல்டபில் போன்... இணையத்தில் வெளியான சூப்பர் தகவல்..!
புகைப்படங்களை எடுக்க நோக்கியா G11 பிளஸ் ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, 2MP இரண்டாவது கேமரா, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் நார்டிக் டிசைன், பின்புறம் கைரேகை சென்சார், 5000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் முழு சார்ஜ் செய்தால் மூன்று நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது.
இதையும் படியுங்கள்: இது போதுமே... இண்டர்நெட் இல்லாமல் ஜிமெயில் பயன்படுத்த ஈசி டிப்ஸ்...!
நோக்கியா G11 பிளஸ் அம்சங்கள்:
- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 V-நாட்ச் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- 1.6GHz ஆக்டா கோர் யுனிசாக் T606 பிராசஸர்
- மாலி G57 MP1 GPU
- 4GB LPDDR4x ரேம்
- 64GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 12
- 50MP பிரைமரி கேமரா
- 2MP டெப்த் / மேக்ரோ கேமரா, f/2.4
- 8MP செல்பி கேமரா
- 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 18 வாட் சார்ஜிங்
புதிய நோக்கியா G11 பிளஸ் ஸ்மார்ட்போன் லேக் புளூ மற்றும் சார்கோல் கிரே நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.