சூப்பர் ஆஃபர்கள்... மிட் ரேன்ஜ் பிரிவில் புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்... விற்பனை எப்போ தெரியுமா?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய விற்பனை விரைவில் துவங்க இருக்கிறது. 

OnePlus Nord 2T 5G Price in India, Specifications, and other details

ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் நார்டு 2t ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.43 இன்ச் FHD+ புளூயிட் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், 32MP இன் ஸ்கிரீன் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய நார்டு ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 1300 பிராசஸர், அதிகபட்சம் 12GB ரேம், ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 12 வழங்கப்பட்டு உள்ளது. 

இதையும் படியுங்கள்: லெய்காவுடன் கூட்டணி.. வேற லெவல் கேமராவுடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்..!

இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு முக்கிய ஆண்ட்ராய்டு அப்கிரேடுகள், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட உள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP 119 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2MP பிளாக் அண்ட் வைட் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: மின் கட்டணம் செலுத்துங்க... பொது மக்களிடம் லட்சக் கணக்கில் மோசடி செய்த ஹேக்கர்கள்..!

OnePlus Nord 2T 5G Price in India, Specifications, and other details

ஒன்பிளஸ் நார்டு 2t அம்சங்கள்:

- 6.43 இன்ச் FHD+ புளூயிட் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
- ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1300 6nm பிராசஸர்
- ARM G77 MC9 GPU
- 8GB LPDDR4X ரேம், 128GB (UFS 3.1) மெமரி
- 12GB LPDDR4X ரேம், 256GB (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 12.1
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ், OIS
- 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 2MP மோனோ கேமரா, f/2.4
- 32MP செல்பி கேமரா, f/2.4 
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2, யு.எஸ்.பி. டைப் சி
- 4500mAh பேட்டரி
- 80 வாட் சூப்பர் வூக் பாஸ்ட் சார்ஜிங் 

இதையும் படியுங்கள்: இனி அந்த கவலை வேண்டாம்... விரைவில் வாட்ஸ்அப் வரும் புது அம்சம்...!

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ஒன்பிளஸ் நார்டு 2t ஸ்மார்ட்போன் கிரே ஷேடோ மற்றும் ஜேட் ஃபாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என்றும் 12GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூலை 5 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை அமேசான் வலைதளம், ஒன்பிளஸ் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் நடைபெற உள்ளது.

அறிமுக சலுகைகள்:

- ஜூலை 5 முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை தேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ. 1500 உடனடி தள்ளுபடி.

- அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு மட்டும்.

- ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் மூலம் வாங்கும் முதல் ஆயிரம் பேருக்கு ஒன்பிளஸ் நார்டு ஹேண்டி ஃபேனி பேக் வழங்கப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios