PSLV-C54 EOS-06 Mission: நவ. 6 ஆம் தேதி 8 நானோ செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் இஸ்ரோ
ISRO எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், வரும் நவம்பர் 26 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV-C54/ EOS-06 ராக்கெட் மூலம் Oceansat-3 மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்கள்களை விண்ணில் செலுத்தவுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகள் பாராட்டும் வகையில் இஸ்ரோ நிறுவனம் வான்வெளித்துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது 8 நானோ செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. வரும் நவம்பர் 26 ஆம் தேதி, சனிக்கிழமை காலை 11.46 மணிக்கு PSLV-C54/ EOS-06 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகக்கோள் விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக என்று விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரோவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, ‘இந்த பணியில் EOS-06 (Oceansat-3) மற்றும் எட்டு நானோ செயற்கைக்கோள்கள் ஏவப்பட உள்ளன.அவை: பூட்டான்சாட், பிக்ஸலின் ஆனந்த், துருவா ஸ்பேஸின் இரண்டு தைபோல்ட், யுஎஸ்ஏ ஸ்பேஸ்ப்ளைட்டின் நான்கு ஆஸ்ட் ரோகாஸ்ட் ஆகும்.
Youtube வீடியோக்களை மொத்தமாக டவுன்லோடு செய்வது எப்படி!
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் சார்பில் உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பிரதான பாராசூட் ஏர் டிராப் சோதனை (IMAT) நடத்தப்பட்டது. ககன்யான் டெசிலரேஷன் சிஸ்டத்தில் சிறிய ஏசிஎஸ், பைலட் மற்றும் ட்ரோக் பாராசூட்கள் தவிர, மூன்று முக்கிய பாராசூட்கள் உள்ளன. இது தரையிறங்கும் போது குழு தொகுதியின் வேகத்தை பாதுகாப்பான நிலையை அடையும் வகையில் குறைக்கிறது’ என்றார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் நவம்பரம் 26 ஆம் தேதி பிஎஸ்எல்வி-சி 54 ராக்கெட் ஏவப்பட உள்ளது. ஏவுதல் நிகழ்வை பார்வையாளர்களும் அரங்கத்தில் இருந்து பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு https://lvg.shar.gov.in/ என்ற இணையதளத்தில் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த இணையதளத்திற்குச் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.isro.gov.in/ பார்க்கவும்.