- Home
- டெக்னாலஜி
- ஸ்மார்ட்போன் உலகில் அடுத்த சென்சேஷன்: வேற லெவல் பெர்ஃபார்மன்ஸுடன் என்ட்ரி கொடுக்கும் Poco X8 Pro Max!
ஸ்மார்ட்போன் உலகில் அடுத்த சென்சேஷன்: வேற லெவல் பெர்ஃபார்மன்ஸுடன் என்ட்ரி கொடுக்கும் Poco X8 Pro Max!
Poco X8 Pro விரைவில் வெளியாகும் போக்கோ X8 Pro மற்றும் X8 Pro Max. 8500mAh பேட்டரி, மீடியாடெக் ப்ராசஸர் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் குறித்த முழு விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

Poco X8 Pro போக்கோ ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்: விரைவில் வெளியாகும் Poco X8 Pro சீரிஸ்
ஸ்மார்ட்போன் பிரியர்கள் மத்தியில், குறிப்பாக கேமிங் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற பிராண்ட் 'போக்கோ' (POCO). அந்த வரிசையில், போக்கோ நிறுவனம் தனது புதிய 'Poco X8 Pro' மற்றும் 'Poco X8 Pro Max' ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை உலகளாவிய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
சமீபத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) TDRA சான்றிதழ் இணையதளத்தில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் (மாடல் எண்கள் 2511FPC34G மற்றும் 2602BPC18G) பட்டியலிடப்பட்டுள்ளன. இது இந்த போன்களின் அதிகாரப்பூர்வ வெளியீடு மிக அருகில் உள்ளதை உறுதி செய்துள்ளது. சீனாவில் வெளியான Redmi Turbo 5 மற்றும் Turbo 5 Pro Max மாடல்களின் மறுவடிவமாக (Rebranded version) இந்த போக்கோ சீரிஸ் உலக சந்தைக்கு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்டகாசமான டிசைன் மற்றும் கலர் ஆப்ஷன்கள்
கசிந்துள்ள தகவல்களின்படி, Poco X8 Pro ஸ்மார்ட்போன், மேட் ஃபினிஷ் (Matte finish) செய்யப்பட்ட பின்பக்க பேனல் மற்றும் ஸ்லிம்மான பெசல்களுடன் கூடிய ஃபிளாட் டிஸ்ப்ளேவுடன் வரவுள்ளது. பின்பக்கத்தில் மாத்திரைப் வடிவிலான (pill-shaped) கேமரா மாட்யூல் மற்றும் நேர்த்தியான லுக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த போன்கள் கருப்பு (Black), வெள்ளை (White) மற்றும் டர்க்கைஸ் (Turquoise) என மூன்று அசத்தலான நிறங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. போனின் வலது புறத்தில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் அமைந்துள்ளன; குறிப்பாக, பவர் பட்டன் ஆரஞ்சு நிறத்தில் கொடுக்கப்பட்டிருப்பது இதன் டிசைனை மேலும் ஸ்பெஷல் ஆக்குகிறது.
Poco X8 Pro: சிறப்பம்சங்கள் மற்றும் கேமரா விவரங்கள்
Poco X8 Pro ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் 1.5K TCL M10 OLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் 2,000 நிட்ஸ் பிரைட்னஸ் இருப்பதால் சிறப்பான விஷுவல் அனுபவம் கிடைக்கும். பெர்ஃபார்மன்ஸிற்காக MediaTek Dimensity 8500 Ultra ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
புகைப்படங்கள் எடுக்க, பின்பக்கத்தில் 50MP Sony IMX882 மெயின் கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைடு சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. செல்பீக்களுக்காக 20MP முன்பக்க கேமராவும் இடம்பெற்றுள்ளது. இதன் 6,500mAh பேட்டரிக்கு வலுவூட்ட 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
Poco X8 Pro Max: மெகா பேட்டரி மற்றும் பிரம்மாண்ட டிஸ்ப்ளே
பட்டியலில் உள்ள அடுத்த மாடலான Poco X8 Pro Max, அதைவிட ஒருபடி மேலாக 6.83 இன்ச் அளவிலான பெரிய 1.5K OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும், கேமிங் மற்றும் மல்டி டாஸ்கிங்கை தெறிக்கவிட இதில் மிகவும் சக்திவாய்ந்த MediaTek Dimensity 9500s ப்ராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
கேமரா
கேமரா பிரிவில், OIS சப்போர்ட் கொண்ட 50MP Light Hunter 600 மெயின் சென்சார் இடம்பெற்றுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த போனில் ஒரு மிகப்பெரிய 8,500mAh பேட்டரி இடம்பெறலாம் என்று கூறப்படுவது ஸ்மார்ட்போன் உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறந்த பெர்ஃபார்மன்ஸ் மற்றும் பெரிய பேட்டரியை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த Poco X8 Pro சீரிஸ் ஒரு சிறந்த தேர்வாக அமையும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

