- Home
- டெக்னாலஜி
- பெற்றோர்களே உஷார்.. இன்ஸ்டாகிராமில் உங்கள் பிள்ளை ‘இதை’ தேடினால் உடனே உங்களுக்கு அலர்ட் வரும்!
பெற்றோர்களே உஷார்.. இன்ஸ்டாகிராமில் உங்கள் பிள்ளை ‘இதை’ தேடினால் உடனே உங்களுக்கு அலர்ட் வரும்!
Meta சிறுவர்கள் இன்ஸ்டாகிராமில் தற்கொலை குறித்த ஆபத்தான விஷயங்களை தேடினால், இனி பெற்றோருக்கு அலர்ட் வரும் புதிய வசதியை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. அலர்ட் வரும்!

Meta இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சம்
இன்றைய டிஜிட்டல் உலகில், சமூக வலைத்தளங்கள் குறிப்பாக இன்ஸ்டாகிராம் (Instagram) இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனினும், இதில் உள்ள ஆபத்துக்களை தவிர்க்க, மெட்டா (Meta) நிறுவனம் ஒரு சிறப்பான புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்த உள்ளது.
அதன்படி, இன்ஸ்டாகிராமில் 18 வயதுக்குட்பட்ட உங்கள் குழந்தைகள் தற்கொலை அல்லது தங்களை தாங்களே காயப்படுத்திக்கொள்வது தொடர்பான தேடல்களை (Searches) தொடர்ச்சியாக மேற்கொண்டால், இனி நேரடியாக பெற்றோரின் செல்போனுக்கு எச்சரிக்கை நோட்டிபிகேஷன் (Alert Notification) வரும். சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் மெட்டாவின் இந்த புதிய முயற்சி பல தரப்பிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெற்றோருக்கு எப்படி அலர்ட் வரும்?
இந்த புதிய அம்சம் எப்படி செயல்படும் என்பதைப் பார்க்கலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கணக்கை கண்காணிக்கும் வசதியை (Parental Supervision) ஆன் செய்திருந்தால் மட்டுமே இந்த அலர்ட் வரும். ஒரு குழந்தை குறுகிய காலத்திற்குள் தற்கொலை தொடர்பான அல்லது ஆபத்தை விளைவிக்கும் வார்த்தைகளைத் தேடினால் உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
எத்தனை முறை தேடினால் அலர்ட் வரும் என்ற சரியான எண்ணிக்கையை மெட்டா நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும், இந்த எச்சரிக்கை மெசேஜ்கள் இமெயில் (Email), குறுஞ்செய்தி (Text), வாட்ஸ்அப் (WhatsApp) அல்லது இன்ஸ்டாகிராம் ஆப் நோட்டிபிகேஷனாக வரலாம். அந்த அலர்ட்டை க்ளிக் செய்வதன் மூலம், குழந்தை என்ன தேடியுள்ளது என்ற முழு விவரமும், இது குறித்து அவர்களிடம் எப்படி பேசுவது என்பது குறித்த நிபுணர்களின் ஆலோசனைகளும் வழங்கப்படும்.
AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் கூடுதல் கண்காணிப்பு
ஏற்கனவே இன்ஸ்டாகிராம் தற்கொலை தொடர்பான நேரடி தேடல்களை முடக்கியுள்ளதுடன், மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்குத் தேவையான தொழில்முறை ஆலோசனைகள் மற்றும் ஹெல்ப்லைன் எண்களையும் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு, 18 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு கடுமையான பாதுகாப்பு செட்டிங்ஸ்களை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும், தற்கொலை மற்றும் சுயதீங்கு ஆலோசனை குழுக்களின் (Suicide and Self-Harm Advisory Group) வழிகாட்டுதலோடு இந்த புதிய அப்டேட்டை மெட்டா வடிவமைத்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், குழந்தைகள் மெட்டாவின் AI டூல்ஸ் (Meta AI) மூலம் ஆபத்தான விஷயங்களை குறித்து உரையாடினாலும், அதற்கும் பெற்றோருக்கு எச்சரிக்கை வரும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
விரைவில்
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அடுத்த வாரம் முதல் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், விரைவில் இந்தியாவிலும் இது அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

