iPhone 15 Series : வெளியாகும் முன்பே கசிந்த ஐபோன் 15 ப்ரோ & ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் தகவல்கள்.!!
ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் அறிமுகமாக 1 மாதம் உள்ள நிலையில், தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் தனது சமீபத்திய ஐபோன் 15 நிகழ்வை அடுத்த மாதம் செப்டம்பரில் நடத்தும் என்று கூறப்படுகிறது. ஆப்பிள் நான்கு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max. ஐபோன் 14 ப்ரோ தொடரைப் போலவே, ஐபோன் 15 ப்ரோ வரிசையும் சில பிரத்யேக அம்சங்கள் உடன் வருகிறது.
புதிய ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களுடன் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லைட்னிங் போர்ட்டில் இருந்து USB-C க்கு மாறுதல், புதிய பெரிஸ்கோப் கேமரா, ஆப்பிளின் புதிய A17 சிப்செட் மற்றும் பல இதில் அடங்கும். இது 6.1-இன்ச் மற்றும் 6.7-இன்ச் OLED டிஸ்ப்ளேக்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய iOS பீட்டா பதிப்பில் வெளிப்படுத்தப்பட்ட இந்த புதிய அம்சம், சைலண்ட் மோட் கண்ட்ரோல், ஃப்ளாஷ்லைட் ஆக்டிவேஷன், ஃபோகஸ் மோட் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. இதில் புரோ மேக்ஸ் வேரியண்ட் ஒரு பெரிஸ்கோப் லென்ஸைக் கொண்டிருக்கும். இது 5-6x வரை ஆப்டிகல் ஜூம் செய்ய அனுமதிக்கிறது. ஆனால், இது 2023 இன் ப்ரோ மாடலில் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
இதற்கு மாறாக, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் தற்போது 3x ஆப்டிகல் ஜூம் வழங்குகிறது. பின்-கேமரா LiDAR ஸ்கேனரைக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகியவை ஆப்பிளின் அடுத்த ஜெனரேஷன் A17 சிப்செட்டை ஹூட்டின் கீழ் பயன்படுத்தும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். இது 3-நானோமீட்டர் செயல்பாட்டில் முதல் A-சீரிஸ் ஆப்பிள் சிப் என்று கூறப்படுகிறது.
Jio Plan : ரூ.399 ரீசார்ஜ் போதும்.. குடும்பத்துக்கே அன்லிமிடெட் ஆஃபர் - முழு விபரம் இதோ !!