உலகையே கலக்க வருகிறது “ பறக்கும் கார் “ - ஏர்பஸ் நிறுவனம் சாதனை ...!
உலகையே கலக்க வருகிறது “ பறக்கும் கார் “ - ஏர்பஸ் நிறுவனம் சாதனை ...!
நாம் வாழும் இந்த காலக்கட்டத்தில், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கிறது. அனைத்திலும் தொழிநுட்பம் வந்துவிட்டது. சொல்லப்போனால், மனித மூளைக்கு மட்டும் தான் வேலையே தவிர, மனித உடல் உழைப்பு வெகுவாக குறைந்து வருவதை நாம் பார்க்க முடிகிறது.
அந்த வரிசையில் தற்போது, தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக, புது வகை வாகனங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஏர் பஸ் நிறுவனம், பறக்கும் கார்கள் தொடர்பான திட்டம் வகுத்துள்ளது. அதன்படி, இதையடுத்து விமான தயாரிப்பு நிறுவனம் ஒன்று, நகரங்களில் ஒருவர் மட்டும் பயணம் செய்யும் பறக்கும் வாகனங்களை சோதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாகனங்களின் அடுத்த பரிமாணம் :
ட்ரோன்கள் மூலம் பொருட்கள் விற்பனை செய்வது
தானியங்கி பேருந்து பபயன்பாடு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஏர் பஸ் நிறுவனம் அடுத்த மைல்கல்லை எட்டியுள்ளது.
ஏர் பஸ் நிறுவனத்தின் சாதனை :
A380 என்ற மிகப் பிரம்மாண்டமான விமானத்தை வடிவமைத்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.
அறிமுகமாகிறது பறக்கும் கார் :
இந்நிலையில், புதிதாக தயாரிக்கப்படும் பறக்கும் காரை இயக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக தனியாக ஓடுபாதைகள் தேவையில்லை. இந்த பறக்கும் கார், எதிரில் வரும் பிற விமானங்களை அறிந்து மாற்றுப் பாதையில் இயங்கும் தன்மை கொண்டது.
குறிப்பு :
இந்த பறக்கும் காரில், முதலில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பது குறிபிடத்தக்கது. மேலும், இதற்குண்டான அனைத்து சோதனை ஓட்டங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு, வரும் 2020 ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது .