வந்துவிட்டது இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர்.. எங்கு தெரியுமா? வாடகை மட்டும் இத்தனை லட்சமாம் !!
உலகிலேயே தொழில்நுட்ப சாதனங்களுக்கு பெயர் போன ஆப்பிள் நிறுவனம், வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவில் நேரடி சில்லறை விற்பனை நிலையங்களை அமைத்துள்ளது.
இந்தியாவில் ஆப்பிளின் முதல் அதிகாரப்பூர்வ சில்லறை விற்பனைக் கடை, மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) உள்ள ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் இன்று திறக்கப்பட்டது.
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கும் கடையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் என்றும் தலைவலி வெளியாகி உள்ளது. ஆப்பிள் ஸ்டோரின் கான்செப்ட் நிச்சயமாக இந்தியாவிலேயே முதன்மையானதாக இருக்கும்.
இதையும் படிங்க..போன் வாங்க போறீங்களா? 2023ல் வெளிவரும் டாப் 5 மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்ஸ் லிஸ்ட் இதோ
ஆப்பிள் சாதனங்களுக்கான சர்வீஸ் உள்ளிட்டவற்றை பயனாளர்கள் நேரடியாக பெறலாம். அதோடு அந்த நிறுவனத்தின் அண்மைகால வெளியீடுகளான iPhone 14, iPad, AirPod, MacBooks, Apple Watches, HomePods மற்றும் Apple தொலைக்காட்சி என அனைத்து சாதனங்களும் கிடைக்கும். அதோடு, ஆப்பிள் சாதனங்களின் விலையும், அந்த குறிப்பிட்ட விற்பனை நிலையங்களில் கணிசமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்டோர் ஆப்பிள் பிகேசி (Apple BKC) என அழைக்கப்படுகிறது. இன்று காலை 11 மணிக்கு கோலாகலமாக ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்டது. டிம் குக்குடன் பலரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். வருகின்ற ஏப்ரல் 20ஆம் தேதி டெல்லியில் சாகேத் பகுதியில் அமைந்துள்ள ஆப்பிள் சாகேத் (Apple Saket) ஸ்டோரை டிம் குக் திறந்து வைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
20,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த ஆப்பிள் ஸ்டோரில், சுமார் 20க்கு மேற்பட்ட மொழிகளை பேசக்கூடிய 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த ஸ்டோரில் வேலை செய்கின்றனர். ஐபோன், ஐபேட், மேக், ஏர்பாட்ஸ், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் டிவி, ஹெட்போன்ஸ் என பல்வேறு ஆப்பிள் தயாரிப்புகள் இந்த ஸ்டோரில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்டோருக்காக ஆப்பிள் நிறுவனம் 11 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. மாதம் இந்த ஆப்பிள் ஸ்டோருக்காக 42 லட்சம் ரூபாய் வாடகை செலுத்த வேண்டும் என்றும், ஸ்டோர் வருவாயில் 2% தொகையையும் செலுத்த வேண்டும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. .ஐபோன் வாங்குவதற்காக மக்கள் கடைக்கு வெளியே நீண்ட வரிசையில் பொறுமையாக காத்துக்கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..பள்ளியில் டீன் ஏஜ் மாணவர்களுடன் உடலுறவு - சேட்டை செய்த 6 பெண் ஆசிரியர்கள்
இதையும் படிங்க..ஏப்ரல் 18 & 19 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. முழு விபரம் உள்ளே!!