பள்ளியில் டீன் ஏஜ் மாணவர்களுடன் உடலுறவு - சேட்டை செய்த 6 பெண் ஆசிரியர்கள்
பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் கடந்த இரண்டு நாட்களில் 6 பெண் ஆசிரியைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டதாக ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
டான்வில்லியைச் சேர்ந்த 38 வயதான எலன் ஷெல் பாலியல் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் புகாரின்படி, ஷெல், "இரண்டு 16 வயது சிறுவர்களுடன் மூன்று முறை உடலுறவு கொண்டதாக" குற்றம் சாட்டப்பட்டார். அவர் வியாழக்கிழமை கர்ரார்ட் கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஷெல் உட்லான் தொடக்கப் பள்ளியில் ஆசிரியரின் உதவியாளராகப் பணிபுரிந்தார். இவர் மட்டுமல்ல, பாலியல் தொல்லை கொடுத்ததற்காக கடந்த வாரத்தில் மட்டும் கைது செய்யப்பட்ட பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆறு ஆகும்.
ஹீதர் ஹேர் என்ற 32 வயதான ஆசிரியை டீன் ஏஜ் மாணவருடன் பாலியல் உறவில் இருந்தார் என்று கூறப்பட்டுள்ளது. ஓக்லஹோமாவைச் சேர்ந்த எமிலி ஹான்காக் (26) என்பவரும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் ஒரு மாணவருடன் உடல் உறவில் ஈடுபட்டதாகக் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
லிங்கன் கவுண்டியில் உள்ள ஒரு ஆசிரியை, 15 வயது மாணவனுடன் தகாத உறவில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதாக புகார் வந்துள்ளது. ஆசிரியர் எம்மா டெலானி ஹான்காக் பள்ளிக்குள்ளேயே மாணவனுடன் உடலுறவில் ஈடுபட்டார்.
அயோவாவின் டெஸ் மொயின்ஸில் உள்ள கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியரான 36 வயதான கிறிஸ்டன் காண்ட், ஒரு டீன் ஏஜ் மாணவருடன் ஐந்து முறை தனது பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் உடலுறவு கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதற்காக கைது செய்யப்பட்டார்.
ஜேம்ஸ் மேடிசன் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியை அல்லி கெரட்மண்ட், 33, பல மாதங்களாக ஒரு மாணவருடன் உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டார். பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஈட்டி எறிதல் பயிற்சியாளர், அவர் பயிற்சியளித்த 17 வயது சிறுவனுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.
ஹன்னா மார்த் என்ற 26 வயதான ஆசிரியை, நார்தாம்ப்டன் ஏரியா ஹைஸ்கூல் டிராக் அண்ட் ஃபீல்ட் தடகள வீரருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதை பொலிசார் கண்டுபிடித்த பின்னர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவங்கள் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..ஏப்ரல் 18 & 19 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. முழு விபரம் உள்ளே!!