ஏப்ரல் 18 & 19 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. முழு விபரம் உள்ளே!!
ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொதுவாக திருவிழா மற்றும் சிறப்பு தினங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது உண்டு. திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஏப்ரல் 18 ஆன இன்று தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பலரும் திரளாக தேர்த்திருவிழாவிற்கு வருவார்கள் என்பதால் தமிழ்நாடு அரசு காவல்துறை ஆகியோர் பலத்த பாதுகாப்பை செய்துள்ளனர்.
இதையும் படிங்க..அடித்தது ஜாக்பாட்! 20 ஆயிரம் பேருக்கு வேலை.. மீண்டும் சிக்ஸர் அடித்த முதல்வர் ஸ்டாலின்!!
இந்த நிலையில், ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய 2 நாட்களுக்கு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை அறிவிப்பு தேர்வு நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பொருந்தாது. இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக முறையை ஏப்ரல் 29, மே 13 ஆகிய தேதிகளில் பணி நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..ஜிஎஸ்டி விதியில் அதிரடி மாற்றம்.. மே 1 முதல் ஜிஎஸ்டி விதிகள் மாறுகிறது - முழு விபரம்