Asianet News TamilAsianet News Tamil

நிதி மோசடியில் ஈடுபட்ட 100 சீன இணைய தளங்களுக்குத் தடை! மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

ஏற்கெனவே இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்த TikTok, Xender, Shein, Camscanner உள்ளிட்ட பல சீன மொபைல் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

India to ban over 100 Chinese-operated websites in crackdown on investment scams sgb
Author
First Published Dec 5, 2023, 4:50 PM IST

இந்தியர்களைக் குறிவைத்து முதலீடு தொடர்பான நிதி மோசடிகளில் ஈடுபட்டுவரும் 100-க்கும் மேற்பட்ட சீன இணையதளங்களை தடை செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

உள்துறை அமைச்சகம் சார்பில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு இந்த இணையதளங்களை உடனடியாக முடக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு ஆகியவற்றிற்கு பாதகமானவையாகக் கருதப்படும் சுமார் 250 சீன அப்ளிகேஷன்களை தடை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சந்திரயான்-3 உந்தவிசைக் கலனை பூமியின் சுற்றுவட்டப்பாதைக்குக் கொண்டுவந்த இஸ்ரோ!

India to ban over 100 Chinese-operated websites in crackdown on investment scams sgb

இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்த TikTok, Xender, Shein, Camscanner உள்ளிட்ட பல சீன மொபைல் செயலிகள் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த மொபைல் அப்ளிகேஷன்கள் பயனர்களின் முக்கியமான தரவுபளைச் சேகரிக்கும் அனுமதிகளைக் கோருவதாகவும், பெறப்பட்ட பயனர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்துவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், PUBG மொபைல் கேம் இந்தியப் பதிப்பு, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும்  ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டது. போர் சண்டையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த கேம் இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்தது. ஒரு வருடத்தில் 10 கோடி பயனர்களைக் கடந்தது.

26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி சஜித் மிர் கவலைக்கிடம்! பாக். சிறையில் விஷம் வைத்துக் கொல்ல முயற்சி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios