சந்திரயான்-3 உந்தவிசைக் கலனை பூமியின் சுற்றுவட்டப்பாதைக்குக் கொண்டுவந்த இஸ்ரோ!
உந்துவிசை கலனில் எஞ்சியிருக்கும் 100 கிலோவிற்கும் அதிகமான எரிபொருள் மூலம் அதில் உள்ள கூடுதல் தகவலைச் சேகரித்து எதிர்காலத்தில் மேற்கொள்ளும் நிலவு குறித்த ஆய்வுகளில் பயன்படுத்தலாம் என்றும் இஸ்ரோ கருதியது.
சந்திரயான்-3 திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட உந்துவிசை கலன் சந்திரனைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் இருந்து பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான சோதனை வெற்றிகரமாக முடிந்திருப்பதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.
சந்திரனின் தென் துருவப் பகுதிக்கு அருகில் மென்மையாக தரையிறங்குவது மற்றும் 'விக்ரம்' லேண்டர் மற்றும் 'பிரக்யான்' ரோவர் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளவது ஆகியவை தான் சந்திரயான்-3 பணியின் முதன்மை நோக்கங்கள். இதற்காக சந்திரயான் விண்கலம் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து LVM3-M4 ராக்கெட் மூலம் ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
ஆகஸ்ட் 23 அன்று, விக்ரம் லேண்டர் சந்திரனில் மென்மையான தரையிறக்கம் செய்து வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியது. பின், பிரக்யான் ரோவர் லேண்டரில் இருந்து இறங்கி ஆய்வுகளைத் தொடங்கியது. லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள அறிவியல் கருவிகள் 14 நாள் செயல்பட்டு உறக்க நிலைக்குச் சென்றன.
இதனையடுத்து, "சந்திரயான்-3 திட்டத்தின் பணி நோக்கங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன" என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்தது.
சந்திரயான்-3 திட்டத்தில் விக்ரம் லேண்டரை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து படிப்படியாக உயர்த்தி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குக் கொண்டு செல்ல புரொபல்ஷன் மாட்யூல் எனப்படும் உந்துவிசை கலன் பயன்படுத்தப்பட்டது. பிறகு, உந்துவிசை கலனில் உள்ள ஷேப் (SHAPE) என்ற கருவியை பயன் ஆய்வு செய்ய பயன்படுத்தலாம் என்றும் இஸ்ரோ திட்டமிட்டது.
உந்துவிசை கலனில் எஞ்சியிருக்கும் 100 கிலோவிற்கும் அதிகமான எரிபொருள் மூலம் அதில் உள்ள கூடுதல் தகவலைச் சேகரித்து எதிர்காலத்தில் மேற்கொள்ளும் நிலவு குறித்த ஆய்வுகளில் பயன்படுத்தலாம் என்றும் இஸ்ரோ கருதியது. படிப்படியாக உந்துவிசை கலன் பூமியின் சுற்றுவட்டப்பாதைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இஸ்ரோவின் திட்டத்தின் படி, தேவையான நேரங்களில் எல்லாம் SHAPE கருவி இயக்கப்படுகிறது. குறிப்பாக கடந்த அக்டோபர் 28ஆம் தேதி சூரிய கிரகணத்தின்போது SHAPE பேலோட் இயக்கப்பட்டது என்று இஸ்ரோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எய்ட்ஸ் நிதிக்காக செக்கச் சிவந்த நிறத்தில் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகம்!