ஆன்லைன் ஆர்டர் பரிதாபம்... மனிதக் கழிவுடன் வந்த மளிகைப் பொருட்கள்... அருவருப்புடன் புலம்பும் முதியவர்

"மனிதக் கழிவுவைப் பார்த்து நான் முற்றிலும் அதிர்ச்சி அடைந்தேன். நான் மிகவும் வெறுத்துப் போயிருக்கிறேன். இது மிகவும் அருவருப்பானது" என்று பாதிக்கப்பட்ட முதியவர் கூறியுள்ளார்.

Disgusting And Sickening: UK Man Gets Human Poop In Online Grocery Order sgb

பிரிட்டனைச் நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் ஆன்லைனில் ஆர்டர் செய்த மளிகைப் பொருட்களுடன் மனித மலம் கலந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்சலைத் திறந்து பார்த்துவிட்டு மிகவும் அருவருப்பு அடைந்ததாக அவர் கூறியுள்ளார்.

பிரிட்டன் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியின்படி, லங்காஷயரில் வசிக்கும் 59 வயதான பில் ஸ்மித், ஒரு மாதத்திற்கும் மேலாக ஊருக்கு வெளியே வசித்து வருகிறார். தனக்குத் தேவையான பொருட்களை சேமித்து வைப்பதற்காக, சூப்பர் மார்க்கெட் நிறுவனமான ஐஸ்லாந்தில் இருந்து ரூ.15,000 மதிப்புள்ள மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.

அவரது ஆர்டரின் பேரில் டெலிவரி செய்யப்பட்ட மளிகைப் பொருட்களை தனது சமையலறைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது, கை தவறி பார்சல் கீழே விழுந்தபோது அதற்கு மனிதக் கழிவு கலந்திருப்பது தெரியவந்ததாக ஸ்மித் கூறியுள்ளார். "அதைப் பற்றிச் சொல்ல அருவருப்பு என்பதைத் வேறு வார்த்தைகள் இல்லை" என்று நொந்துபோய் சொல்கிறார் ஸ்மித்.

"மனிதக் கழிவு கீழே விழுந்ததைப் பார்த்து நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்தேன். கீழே என்ன கிடக்கிறது என்று யோசித்தேன். பின் மற்றொரு பையைத் திறந்த பார்த்தேன். அதிலும் அதுதான் இருந்தது. நான் மிகவும் வெறுத்துப் போயிருக்கிறேன். இது அருவருப்பானது" என்று அவர் கூறியுள்ளார்.

"சூப்பர் மார்க்கெட்டைத் தொடர்பு கொண்டு, எனக்கு எந்த இழப்பீடும் வேண்டாம். அனுப்பிய அசிங்கத்தை மட்டும் எடுத்துச் செல்லுங்கள் என்று கூறினேன். அவர்கள் தங்கள் கொடூரமான தவறை நியாயப்படுத்தாமல் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறேன்" என்று சொல்கிறார் ஸ்மித்.

சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. அந்நாட்டு சுகாதாரத்துறை சூப்பர் மார்க்கெட்டில் விசாரணை நடத்தி வருவதாகக் கூறியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios