Asianet News TamilAsianet News Tamil

ஒரே பிளேலிஸ்டை ஒன்றாகக் கேட்டு ரசிக்கலாம்! ஆப்பிள் மியூசிக்கில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வசதி அறிமுகம்!

ஆப்பிள் பயனர்கள் ஆப்பிள் மியூசிக்கில் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த கூட்டுப் பிளேலிஸ்ட் (collaborative playlists) வசதி iOS 17.2 அப்டேட் மூலம் கிடைக்கிறது. 

How to use the new Apple Music collaborative playlists sgb
Author
First Published Nov 23, 2023, 6:23 PM IST

ஆப்பிள் மியூசிக் மிகவும் பிரபலமான சந்தா அடிப்படையிலான மியூசிக் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாகும். இது பரந்த அளவிலான பாடல்கள், பிளேலிஸ்ட்கள் போன்ற பலவற்றை வழங்குகிறது. உயர்தரத்தில் இசையை ரசிக்க முடிவதுடன், ஒவ்வொரு பாடலுக்கும் பாடல்வரிகளை அளிப்பது முதல் ஒரே கிளிக்கில் ஒரு பாடலை கரோக்கியாக மாற்றும் அம்சம் வரை பல அம்சங்களைக் கொண்டது.

இருப்பினும் ஆப்பிள் பயனர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு அம்சம் கூட்டுப் பிளேலிஸ்ட் (collaborative playlists). அது இப்போது ஆப்பிள் வெளியிட்டுள்ள iOS 17.2 அப்டேட்டுடன் கிடைக்கிறது. ஆப்பிள் மியூசிக் பயனர்கள் கூட்டு பிளேலிஸ்ட் வசதியை பயன்படுத்தி மகிழலாம்.

நண்பர்களுடன் கூட்டாக ஒரு பிளேலிஸ்டை உருவாக்கி இசையை ரசித்து மகிழ இந்த அம்சம் பயன்படுகிறது. இந்தக் கூட்டு பிளேலிஸ்டில் உறுப்பினராக இருப்பவர்கள் தங்கள் விருப்பப்படி லிஸ்டில் பாடல்களைச் சேர்க்கவும் நீக்கவும் முடியும். பாடல்களின் வரிசையை மாற்றும் வசதியும் பிளேலிஸ்டில் இணைந்திருக்கும் அனைவருக்கும் இருக்கும்.

படுக்கையில் பாதியை வாடகைக்கு விட்டு மாதம் ரூ.54,000 சம்பாதிக்கும் பெண்! பேஸ்புக் மூலம் இதெல்லாம் நடக்குதா!

How to use the new Apple Music collaborative playlists sgb

கூட்டு பிளேலிஸ்ட் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது? அதற்கு இரண்டு அடிப்படைத் தேவைகள் உள்ளன. உங்களிடம் ஐபோனில் iOS 17.2 அப்டேட் செய்திருக்க வேண்டும். மொபைலில் உள்ள ஆப்பிள் மியூசிக் செயலியில் சந்தாவையும் செலுத்தியிருக்க வேண்டும்.

1. உங்கள் ஐபோன் அல்லது ஐபாடில் ஆப்பிள் மியூசிக் (Apple Music) செயலியைத் திறக்கவும்.

2. செயலியில் கீழே உள்ள லைப்ரி பகுதிக்குள் செல்ல வேண்டும். பின்னர் பிளேலிஸ்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்யுங்கள்.

3. இப்போது புதிய பிளேலிஸ்ட்டை உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள பிளேலிஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கலாம். (Save செய்து வைத்துள்ள பிளேலிஸ்ட்களில் இந்த அம்சம் வேலை செய்யாது)

4. மேல் பகுதியில் வலது மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகளைத் தொட்டு, திரையில் தோன்றும் ஆப்ஷன்களில் கூட்டு பிளேலிஸ்ட் (collaborative playlists) என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யவும்.

5. இதன் மூலம் கூட்டு பிளேலிஸ்டில் நீங்கள் யாராச் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களை எல்லாம் சேர்க்கலாம். பின், collaborative playlists ஐ செயல்படுத்த Start Collaboration என்பதை கிளிக் செய்யுங்கள்.

எப்போது வேண்டுமானாலும் இதே பிளேலிஸ்ட்டிற்குச் சென்று, மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகளைத் தொட்டு பிளேலிஸ்டில் உறுப்பினர்களைச் சேர்க்கவும் நீக்கவும் செய்யலாம்.

படித்தது ஐஐடி; விற்பது பசு மாடுகள்; வருமானமோ 500 கோடி ரூபாய்; சாதிக்கும் இரண்டு பெண்கள்!!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios