Asianet News TamilAsianet News Tamil

படுக்கையில் பாதியை வாடகைக்கு விட்டு மாதம் ரூ.54,000 சம்பாதிக்கும் பெண்! பேஸ்புக் மூலம் இதெல்லாம் நடக்குதா!

''படுக்கையறையையும் ஒரு குயின் சைஸ் படுக்கையையும் பகிர்ந்துகொள்கிறேன். முன்பு ஒரு பேஸ்புக்கில் கண்ட ஒருவருடன் எனது படுக்கையறையைப் பகிர்ந்துகொண்டேன். அது நன்றாகவே இருந்தது" என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.

Toronto Woman Puts Half Of Her Bed For Rent At Rs 54,000 for a Month Amid Soaring Prices sgb
Author
First Published Nov 23, 2023, 4:52 PM IST | Last Updated Nov 23, 2023, 5:19 PM IST

கனடா நாட்டின் டொராண்டோ நகரில் வீட்டு வாடகைகள் விண்ணை முட்டும் நிலையில், ஒரு பெண் தனது படுக்கையில் பாதியை வாடகைக்கு விடுவதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்திருக்கிறார்.

டொராண்டோவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்டான அன்யா எட்டிங்கர் என்பவர் பேஸ்புக் மார்க்கெட்பிளேஸில் கடந்த மாதம் வெளியான ஒரு பதிவைப் பற்றிப் பகிர்ந்திருந்துள்ளார். அதில் யாரோ ஒருவர் தனது படுக்கையில் பாதியை மாதம் 900 கனேடிய டாலர்களுக்கு (ரூ. 54,790) வாடகைக்கு விடுவதாகக் கூறியிருந்ததாகவும் பிறகு அந்தப் பதிவு டெலிட் செய்யப்பட்டுவிட்டது என்றும் அன்யா கூறுகிறார்.

''படுக்கையறையையும் ஒரு குயின் சைஸ் படுக்கையையும் பகிர்ந்துகொள்கிறேன். முன்பு ஒரு பேஸ்புக்கில் கண்ட ஒருவருடன் எனது படுக்கையறையைப் பகிர்ந்துகொண்டேன். அது நன்றாகவே இருந்தது" என்று அந்தப் பதிவில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது அந்தப் பதிவு பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

படித்தது ஐஐடி; விற்பது பசு மாடுகள்; வருமானமோ 500 கோடி ரூபாய்; சாதிக்கும் இரண்டு பெண்கள்!!

Toronto Woman Puts Half Of Her Bed For Rent At Rs 54,000 for a Month Amid Soaring Prices sgb

இந்தப் பதிவைக் குறிப்பிட்டு அன்யா எட்டிங்கர் டொராண்டோ நகரில் நிலவும் வாடகை உயர்வு பிரச்சினை குறித்து கவலை தெரிவித்துள்ளார். இந்தப் பதிவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து பலரும் தங்கள் கருத்துகளைக் கூறிவருகின்றனர். வீடியோவைப் பார்த்த ஒரு பயனர், ''இப்படி அறிவிப்பது அபத்தமானது. இதில் திகைப்பூட்டும் விஷயம் என்னவென்றால், அவர் ஏற்கெனவே இதை முயன்று பார்த்துவிட்டு மாற்றாக ஒருவரைத் தேடுகிறார்'' என்று கூறியுள்ளார்.

''இது தனிமையைப் போக்கும் வழியாக இருக்கும் என்பதுதான் இதன் மூலம் கிடைக்கும் நன்மை" என்று மற்றொருவர் பயனர் தெரிவிக்கிறார்.

டொராண்டோ கனடாவின் இரண்டாவது விலையுயர்ந்த ரியல் எஸ்டேட் சந்தையாகத் திகழ்கிறது. டொராண்டோவில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டின் சராசரி வாடகை 2,614 டாலர் ( அதாவது ரூ.2,17,870) என்று நியூயார்க் டைம்ஸ் அறிக்கை ஒன்று சொல்கிறது.

இந்த ஆண்டு கல்யாண சீசனில் 38 லட்சம் திருமணங்கள்... 4.74 லட்சம் கோடி வர்த்தகம்: CAIT கணிப்பு

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios