CrowdStrike பாதிப்பு ஏன்? Falcon Sensor Software எதற்கு? சைபர் அட்டாக் தான் காரணமா?

மைக்ரோசாப்ட் விண்டோ உலகம் முழுவதும் பரவலான செயலிழப்பை எதிர்கொண்டுள்ளது. இன்று இரவுக்குள் இதை சரி செய்துவிடலாம் என்று கூறப்பட்டாலும், தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கு எப்போதும் சவாலாகவே இருந்து வருகிறது.
 

How CrowdStrike connects with Falcon Sensor Software? Is it Cyber attack?

உலகெங்கும் மைரோசாப்ட் விண்டோ முடங்கியுள்ளது. இதனால், உலகம் முழுவதும் விமான டிக்கெட்டுகள் புக் செய்வது முதல் பங்குச் சந்தை வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு விமான நிலையங்களில் கையால் விமான டிக்கெட் எழுதி கொடுக்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகி வருகிறது. எங்கு? எவ்வாறு இந்த தொழில்நுட்பக் கோளாறு நடந்தது என்று பார்க்கலாம்?

What is CrowdStrike:
CrowdStrike என்பது சைபர் செக்யூரிட்டி அமைப்பு. இந்த CrowdStrike-ஐ பாதுகாக்கும் நோக்கத்தில் Falcon Sensor software உடன் இணைக்கப்பட்டுள்ளது. CrowdStrike என்பது மென்பொருள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டதுதான். எந்த நாட்டில் இருந்து சைபர் அட்டாக் செய்தாலும் இந்த CrowdStrike எந்த பாதிப்புக்கும் உள்ளாகாது. Falcon Sensor software இதை பாதுகாக்கும்.

ஆனால், என்ன நடந்தது என்றால்,  Falcon Sensor software-ல் உருவான ஒரு கோளாறு தான் மைரோசாப்ட் விண்டோசின் புளூ ஸ்கிரீனில் BSOD தவறு காட்டியது என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த சாப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்டு வந்து இருந்தாலும், இந்த தவறு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மென்பொருள் முடக்கம்; உலகம் முழுவதும் பாதிப்பு சரி செய்வது எப்படி? Microsoft விளக்கம்!

டேட்டா இழப்பு:
மைக்ரோசாப்ட் விண்டோவில் இந்த தவறு நடந்தவுடன் விண்டோ பிசி அனைத்தும் செயலிழந்துவிட்டது அல்லது முடங்கியது. பொதுவாக ஒருவரது கணினி கடுமையான சிக்கலுக்கு உள்ளாகும்போது இதுபோன்று ஏற்படும். இது கணினியில் இருக்கும் டாடா இழப்புக்கும் வழி வகுக்கும். தற்போது இந்த செயலிழப்பால் டாடா இழப்பு ஏற்படுமா என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை.

விமான சேவை பாதிப்பு:
இந்த செயலிழப்பு நடந்தவுடன் உலகளவில் மைக்ரோசாப்ட் 365, அமேசான் வெப் சர்வீசஸ், இன்ஸ்டாகிராம், இ-பே போன்ற சமூக ஊடகங்களும் பாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து விமான நிலையங்களில் விமானங்கள் புறப்பட்டுச் செல்வதிலும் பாதிப்பு ஏற்பட்டது. டெல்டா, யுனைடெட், அமெரிக்காவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ், இந்தியாவில் இண்டிகோ ஆகிய விமான சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து ஸ்கை டிவி சேனலும் செய்தியை ஒளிபரப்ப முடியாமல் திணறியது. சூப்பர் மார்க்கெட்டுகளும் பாதிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் இடையூறு ஏற்பட்டது.

Microsoft outage | மைக்ரோசாப்ட் செயலிழப்பு - கையால் எழுதப்படும் விமான போர்டிங் பாஸ்!

இந்த தொடர் நெருக்கடியை அடுத்து, CrowdStrike தலைமை நிர்வாகி ஜார்ஜ் குட்ஸ் தனது டுவிட்டரில், ''விண்டோஸ் ஹோஸ்டில் மட்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Mac, LinuX ஹோஸ்ட்டுகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது பாதுகாப்பு தொடர்பானது அல்ல. சைபர் அட்டாக்கும் இல்லை. என்ன தவறு என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. உடனடியாக சரி செய்யப்படும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மைரோசாப்ட் 365 விண்டோவில் நடந்த தவறு குறித்து முழுவதுமாக ஆய்வு செய்து வருகிறோம். இதையடுத்தே, மேலும் பல முக்கிய தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவோம்'' என்று மைரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வங்கிகள் பாதிப்பா?
இந்தியாவில் தேசிய தகவல் மையம் (என்ஐசி) நெட்வொர்க் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்றும் மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருக்கும் பத்து வங்கிகளில் மட்டுமே சிறிது பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கியும் விளக்கம் அளித்துள்ளது.

சிக்கலை சரி செய்வது எப்படி?
இந்த சிக்கலை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம். கணினியை safe Mode or the Windows Recovery Environment-ல் ஸ்டார்ட் செய்ய வேண்டும். இதையடுத்து, C:\Windows\System32\drivers\CrowdStrike சென்று C-00000291*.sys என்ற கோப்புகள் ஏதாவது இருந்தால்அதை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இப்படி செய்தால் கணினி எந்த வகையிலும் பாதிக்கப்படாது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios