Microsoft outage | மைக்ரோசாப்ட் செயலிழப்பு - கையால் எழுதப்படும் விமான போர்டிங் பாஸ்!
Microsoft-ன் விண்டோஸ் மென்பொருள் முடங்கியாதால் உலகின் பல்வேறு பகுதிகளில் விமான சேவை உட்பட பல்வேறு முக்கிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் விமான டிக்கெட் புக்கிங் மற்றும் செக்-இன் சேவைகள் முடங்கியுள்ளது.
மைக்கரோசாப்ட்டின் சமீபத்திய Crowd Strike அப்டேட் காரணமாக The Blue Scree of death என்ற பிழை ஏற்பட்டுள்ளதாக Microsoft Inc. மைக்ரோசாப்டின் சேவை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தரப்பில் தெரிவித்துள்ள பதிவில், “எங்கள் Azure பின் தளப் பணியில் ஏற்பட்ட மைய்ய கோளாறு காரணமாக இவ்வளவு பெரிய சிக்னல் பிரச்சனை உண்டாகி இருக்கிறது என்றும், இப்பிரச்சனையை தீர்க்கும் பணியில் முழுமுயற்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம்" என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.
Manual Boarding Pass
மைக்ரோசாப்ட் மென்பொருளின் உலகளாவிய செயலிழப்பால், இந்திய விமான நிலையங்களில் முன்பதிவு செய்தல் மற்றும் செக்-இன் செய்தல் உள்ளிட்ட சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, இதனால் விமான நிறுவனங்கள் மானுவன் முறையில் கைமுறையாக போர்டிங் பாஸ்களை வழங்கி வருகிறது.
இது குறித்து X தளத்தில் ஒருவரு இட்டுள்ள பதிவில், டெல்லி விமான நிலையம் "உலகளாவிய IT பிரச்சினை"யை எதிர்கொண்டு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. சில சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் விமான பயனிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க நாங்கள் எங்கள் பங்குதாரர்கள் அனைவருடனும் தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானபயணிகள் புதுப்பிக்கப்பட்ட விமானத் தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தையோ அல்லது தரையிலுள்ள உதவி மையத்தையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. .
விமான நிறுவனங்கள் பதில்
மைக்ரோசாப்ட் செயலிழப்பு குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், முன்பதிவு முயற்சிகளைத் தவிர்க்குமாறு பயணிகளை கேட்டுக்கொண்டது. நிலைமை சீரானதும் விரைவில் உங்களை தொடர்புகொள்வோம் என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து Akasa Air நிறுவனம் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முன்பதிவு, செக்-இன் மற்றும் முன்பதிவு சேவைகள் உள்ளிட்ட சில ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக கிடைக்காது என்று கூறியது.
மைக்ரோசாப்ட் செயலிழப்பு பல Azure சேவைகளில் சிக்கல்களை தூண்டியுள்ளது. அதன் வாடிக்கையாளர்களின் துணைக்குழுவுடன் தொடங்கியது. விரைவில் உரிய முறையில் தீர்வு காணப்படும் என்றும் மைக்ரோசப்ட் தெரிவித்துள்ளது.