இவ்வளவு தானா.. உங்கள் பழைய ட்வீட்களை நீங்களே டெலிட் செய்யலாம்!

நீங்கள் நீண்டகாலமாக ட்விட்டர் பயனராக இருந்தால், நிறைய ட்வீட்களை வைத்திருக்க வாய்ப்புகள் உள்ளன. ஒருசில எளிய முறைகள் மூலமாக அந்த ட்வீட்களை நீங்களே டெலிட் செய்யலாம்.
 

Here is how you can delete old tweets on Twitter using Semiphemeral tool, check details here

எலோன் மஸ்க் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து ட்விட்டர் எவ்வாறு செயல்படும் என்பது குறித்து பலரும் குழப்பத்தில் தான் உள்ளனர். இன்னும் சிலர் டுவிட்டர் தளத்தை அப்படியே வைத்து விட்டு, வேறு தளத்திற்குச் செல்ல சிந்தித்து வருகின்றனர். அவ்வாறு நீங்கள் பழைய ட்விட்டர் பயனராக இருந்தால், உங்கள் ட்வீட்களை டெலிட் செய்ய விரும்பினால், நீங்களே அதை வெகு எளிமையாக டெலிட் செய்யலாம். இதற்கு Semiphemeral  என்ற கருவி உள்ளது. Semiphemeral என்பது ஒரு குறிப்பிட்ட காலம் வரை தானாகவே ட்வீட்களை டெலிட் செய்ய உதவும். நீங்கள் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இங்குக் காணலாம். .

Semiphemeral இன் இணையதளத்தைத் திறந்தால், "ட்விட்டர் இணைப்புடன் உள்நுழை" என்பதைக் காண்பிக்கும். அதைத் தட்டவும், ட்வீட்களைக் கையாள உங்கள் ட்விட்டர் கணக்கிற்கு இணைய பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்க வேண்டும். அது முடிந்ததும், ஆன்லைன் செயலியின் டாஷ்போர்டு உங்களுக்குக் காட்டப்படும்.

Twitter Blue Tick வழங்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தம், பணி நீக்கமும் இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பு!

அதில் நீங்கள் Semiphemeral பின்வருமாறு பயன்படுத்தலாம்:
 

1. ஒரு செட் த்ரெஷோல்ட் அடிப்படையில் அனைத்து பழைய ட்வீட்களையும் நீக்கலாம்
2. ஆட்டோமெட்டிக் டெலிட் ஆப்ஷனில் குறிப்பிட்ட சிலவற்றுக்கு விலக்கு அளிக்கும் வகையில் செட் செய்யலாம்
3.  குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு ரீடுவீட் செய்தவற்றை அன்-ரீடுவீட் செய்யலாம்.
4.  குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு லைக் செய்தவற்றை அன்-லைக் செய்யலாம்.
5. உங்கள் பழைய மெசேஜ்களை தானாக டெலிட் செய்யலாம்.

Semiphemeral  தளத்தில் லாகின் செய்ததும், எதை நீக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய அமைப்புகளுக்குச் செல்லவும். அங்கு தொடங்குவதற்கு, "பழைய ட்வீட்களை நீக்கு" என்ற ஆப்ஷனை நீங்கள் டிக் செய்ய வேண்டும். அந்த பிரிவின் கீழ், குறிப்பிட்ட தேதிக்கு முந்தைய ட்வீட்களை டெலிட் செய்வதற்கு Semiphemeral தளத்திற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில், பிரபல ட்வீட்கள் அல்லது ரிப்ளே ட்வீட்கள் போன்றவற்றுக்கு விதிவிலக்குகளை அமைக்கலாம்.

இரண்டாவது பிரிவு - “பழைய ட்வீட்களை அன்-ரீட்வீட் மற்றும் அன்-லைக் செய்தல்”. இதுவும் நீங்கள் விரும்பும் தேதியை செட் செய்து, அதற்கு முந்தைய ரீடுவிட், லைக்குகளை மாற்றி அமைக்கலாம். 

இறுதியாக, அமைப்புகள் பக்கத்தின் கீழே, குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு உங்கள் மெசேஜ்களை  நீக்குவதற்கான ஆப்ஷனைக் காண்பீர்கள். அதையும் செய்துகொள்ளலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios