Google AI chatbot : ChatGPT-க்குப் போட்டியாக களம் இறங்கிய Google.. வருகிறது Bard

ChatGPT தளத்திற்குப் போட்டியாக கூகுள் நிறுவனமும் Bard என்ற செயற்கை நுண்ணறிவு மிக்க தளத்தை உருவாக்கியுள்ளது. இது குறித்த முழுமையான விவரங்களை இங்குக் காணலாம்.

Google unveils Bard, its ChatGPT rival: How does it work, check details here

மைக்ரோசாப்ட் பங்களிப்புடன் கடந்த நவம்பர் மாத இறுதியில்  ChatGPT என்ற தளம் அறிமுகம் செய்யப்பட்டது.  இது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் மொழியில் நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் நமக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் நொடிப்பொழுதில் பெற முடியும். 
ஒரு மெயில் எழுத வேண்டுமென்றால், எந்த விதமான மெயில் வேண்டும் என்று டைப் செய்தால் போதும், உடனே சம்பந்தப்பட்ட இமெயிலுக்கான டெம்ப்ளேட்கள் வந்துவிடும். இது கிட்டத்தட்ட கூகுளுக்கு போட்டியாக அமையும் வகையில் செயல்படுகிறது. கூகுளை முறியடிக்கும் வகையில், சாட் ஜிபிடி தளத்திலும் என்ன வேண்டுமானாலும் தேடலாம், அதற்கு ஏற்ற முடிவுகளை பெறலாம். 

இந்த நிலையில், கூகுள் நிறுவனமும் தற்போது செயற்கை நுண்ணறிவு மிக்க தளத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு Bard என்று பெயரிடப்பட்டுள்ளது.  எளிமையான வார்த்தைகளில் சொல்லப்போனால், கூகிள் பார்ட் என்பது AI-இயங்கும் சாட்போட் ஆகும், இது பல கேள்விகளுக்கு உரையாடல் வழியில் பதில்களை வழங்க முடியும் -- ChatGPT போன்றது.

தொழில்நுட்ப ரீதியாக பார்க்கும் போது, இந்த புதிய தளமானது உயர்தர பதில்களை வழங்குவதற்காக, இணையத்தில் உள்ள தகவல்களை பெற்று வழங்குகிறது. இது லேம்படா மூலம் இயங்குகிறது. லேம்படா என்பது  கூகிளின் சாட்பாட், நியூரான் நெட்வொர்க் கட்டமைப்பான டிரான்ஸ்ஃபார்மரில் கட்டமைக்கப்பட்ட கூகிளின் மொழி மாதிரி ஆகும்.  ChatGPT ஆனது GPT-3 மொழி மாதிரியை அடிப்படையாகக் கொண்டது, இது டிரான்ஸ்ஃபார்மரில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

Google Bard செயல்படுத்துவது எப்படி?

தற்போது, ​​கூகுள் பார்ட் பொது மக்களுக்குச் சோதனை முறையில் கூட கிடைக்கவில்லை, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே இதற்கான அணுகல் உள்ளது. கூகுள் "LMDA இன் இலகுரக மாடல் பதிப்பை" வெளியிடுகிறது, இதற்கு கணிசமாக குறைவான கணினி செயல்திறன் இருந்தாலே போதும். 
"பார்ட் மூலம் கிடைக்கும் பதில்கள் தகவல்களில் தரம், பாதுகாப்பு மற்றும் அடிப்படைத் தன்மை ஆகியவற்றை உறுதிசெய்யயும் வகையில் செயல்பாடுகளை கொண்டுள்ளோம்" என்று கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புத்தம் புதிய ஆடியோ தொழில்நுட்பத்துடன் வரும் Netflix

மேலும், பயனர்கள் தரப்பில் இருந்தும் கருத்துகள் வரவேற்கப்படுகிறது. LaMDA ஆல் இயக்கப்படும் Google Bard க்கான கருத்துகளும் கூகுள் நிறுவனத்திற்கு முக்கியமானது. 2021 இல் LaMDA ஐ வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios