புத்தம் புதிய ஆடியோ தொழில்நுட்பத்துடன் வரும் Netflix
நெட்ஃபிக்ஸ் தளத்தில் ஸ்பாஷியல் ஆடியோ தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோ ஸ்டிரீம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி OTT தளத்திலேயே தியேட்டர் அனுபவத்தை பெறலாம்.
OTT தளங்களில் நெட்ஃபிக்ஸ் நிறுவனம் முன்னனியில் இருந்து வருகிறது. இருப்பினும் பொருளாதார மந்த நிலை காரணமாக வருவாயை செலவுகளை குறைத்து வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கையில் நெட்ஃபிக்ஸ் களம் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக நெட்ஃபிக்ஸ் அக்கவுண்டை ஷேர் செய்யும் வசதி முடக்கப்பட்டுள்ளது. மேலும், இனி பயனர்கள் தங்கள் நண்பர்களுடன் நெட்ஃபிக்ஸ் கணக்கை பகிர்ந்து கொண்டால் அதற்கு தனியே கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பயனர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில், தற்போது புதிய ஸ்பாஷியல் தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோக்களை நெட்ஃபிக்ஸ் ஸ்ட்ரீம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஸ்பாஷியல் ஆடியோ என்பது மேம்பட்ட ஆடியோ தொழில்நுட்பமாகும். 360 டிகிரி கோணத்தில், துல்லியமான ஆடியோவை பயனர்களின் செவிக்கு எட்டச் செய்யும் புதிய நுட்பம். கூகுள் நிறுவனமும் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களில் ஸ்பாஷியல் ஆடியோ நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது.
நெட்ஃபிக்ஸில் ஸ்பாஷியல் ஆடியோ தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து சமீபத்திய வலைப்பதிவு இடுகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஸ்பாஷியல் ஆடியோவுடன் கூடிய திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள் என சுமார் 700 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ரூ.649 என்ற நெட்ஃபிக்ஸ் பிரீமியம் பிளானில் சப்ஸ்கிரைப் செய்துள்ள பயனர்களுக்கான டவுன்லோடு சாதனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு மேலாண்மை பிரிவின் இயக்குநர் அரோரா கூறுகையில் "இப்போது, Netflix ஸ்பேஷியல் ஆடியோ மூலம், பிரீமியம் உறுப்பினர்கள் தங்களுக்கு பிடித்தமான படங்களை, வீடியோவை உயர்தர ஒலி நுட்பத்துடன் கண்டுகளிக்கலாம். வீட்டில் டிவி, கணினி, ஃபோன் அல்லது டேப்லெட் என எந்த சாதனத்தில் பார்த்தாலும், உயர்தர ஆடியோவை கேட்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
5G மூலம் அப்ளிகேஷன்களை உருவாக்க 100 ஆய்வகங்களை அமைக்கப்படும்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
Netflix ஸ்பேஷியல் ஆடியோ என்றால் என்ன?
ஸ்பேஷியல் ஆடியோ என்பது சுருக்கமாக சொல்லப்போனால் 3D ஆடியோ எஃபெக்ட்ஸ் ஆகும். இது 360 டிகிரி கோணத்தில் ஆடியோவை வழங்குகிறது. Netflix ஸ்பேஷியல் ஆடியோ அம்சங்களானது ஸ்பீக்கர்கள் அல்லது ஹோம் தியேட்டர் உபகரணங்கள் இல்லாமலும் சாதாரணமான நல்ல தரமான ஆடியோ டிவைஸ் மூலமாக கேட்கலாம். ஆனால், இதற்கென இருக்கும் சாதனங்களில் இந்த நுட்பம் இருந்தாலே முழு பலனையும் அனுபவிக்க முடியும்.