Asianet News TamilAsianet News Tamil

5G மூலம் அப்ளிகேஷன்களை உருவாக்க 100 ஆய்வகங்களை அமைக்கப்படும்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

இந்தியாவில் 5ஜி சேவைகள் மூலம் அப்ளிகேஷன்களை உருவாக்கும் பொருட்டு 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Indian Govt likely to set up 100 labs to develop applications using 5G services, Says Financial Minister
Author
First Published Feb 2, 2023, 11:51 AM IST

2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுமார் ஒரு மணி நேரம் பட்ஜெட் உரை நிகழ்த்தி, அதில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தொழில்நுட்பத் துறையை பொருத்த அளவில், 5ஜி தொழில்நுட்ப சேவைகளுக்கு சில மேம்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் 5ஜி சேவைகளைப் பயன்படுத்தி அப்ளிகேஷன்களை உருவாக்க 100 ஆய்வகங்களை அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வகங்கள், பொறியியல் நிறுவனங்களில் அமைக்கப்படும் என்றும்.  புதிய அளவிலான வாய்ப்புகள், வணிக மாதிரிகள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதே இந்த ஆய்வகங்களின் நோக்கம் ஆகும். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “5ஜி சேவைகளைப் பயன்படுத்தி அப்ளிகேஷன்களை உருவாக்குவதற்கான நூறு ஆய்வகங்கள் பொறியியல் நிறுவனங்களில் புதிய அளவிலான வாய்ப்புகள், வணிக மாதிரிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும். 

ஸ்மார்ட் வகுப்பறைகள், துல்லியமான விவசாயம், கச்சிதமான போக்குவரத்து அமைப்புகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற பயன்பாடுகளை இந்த ஆய்வகங்கள் மூலம் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் கூறினார் . 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாட்டில் 5ஜி சேவை தொடங்கப்பட்டது. இந்தியா மொபைல் காங்கிரஸில் 5ஜி சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது, ​​ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும்  நாடு முழுவதும் உள்ள நகரங்களில் 5ஜி சேவைகளை விரைவில் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

டுவிட்டருக்கு எதிராக புதிய ஆப் உருவாக்கும் முன்னாள் பணியாளர்கள்!

சமீபத்தில், ஜியோ நிறுவனம் தனது 5G சேவை நெட்வொர்க்கை மேலும் 34 நகரங்களுக்கு விரிவுபடுத்தியது, மொத்த எண்ணிக்கையை 225 ஆகக் கொண்டு சென்றது. மறுபுறம், ஏர்டெல் தற்போது 60 க்கும் மேற்பட்ட நகரங்களில் அதன் 5G சேவைகளைக் கொண்டுள்ளது.

4,000 மெகாவாட் திறன் கொண்ட பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை அரசாங்கம் ஆதரிக்கும் என்றும் அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். "பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சிப் பாதையில் வழிநடத்த, 4,000 மெகாவாட் திறன் கொண்ட பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் 18 வைபிலிட்டி கேப் நிதியுதவியுடன் ஆதரிக்கப்படும். உந்தப்பட்ட சேமிப்பு திட்டங்களுக்கான விரிவான கட்டமைப்பும் உருவாக்கப்படும்" என்று மத்திய அமைச்சர் கூறினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios