Asianet News TamilAsianet News Tamil

கூகுள் ப்ளேஸ்டோரில் மேட்ரிமோனி ஆப்ஸ் திடீர் நீக்கம்! சேவைக் கட்டண விவகாரத்தில் அதிரடி!

மேட்ரிமோனி.காம் (Matrimony.com) நிறுவனத்தின் பாரத் மேட்ரிமோனி மற்றும் இன்ஃபோ எட்ஜ் (Info Edge) நிறுவனதிதன் ஜீவன்சதி அப்ளிகேஷ்கள் தொடர்பாக அந்த நிறுவனங்களுக்கு ப்ளேஸ்டோர் சார்பில் விதிமீறல் எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

Google Removes Indian Matrimony Apps From Playstore Over Fee Dispute sgb
Author
First Published Mar 2, 2024, 8:14 AM IST

இந்தியாவில் உள்ள 10 நிறுவனங்களின் மொபைல் அப்ளிகேஷன்களை கூகுள் நிறுவனம் தனது ப்ளேஸ்டோரில் இருந்து வெள்ளிக்கிழமை அகற்றியுள்ளது. இதில் பாரத் மேட்ரிமோனி போன்ற சில பிரபலமான மேட்ரிமோனி அப்ளிகேஷன்களும் அடங்கும். சேவைக் கட்டணம் செலுத்துதல் தொடர்பான சர்ச்சை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சில இந்திய ஸ்டார்ட்அப்களின் மேட்ரிமோனி அப்ளிகேஷன்களில், இன்-ஆப் பேமெண்ட்டுகளுக்கு 15% முதல் 30% வரை கட்டணம் வசூலிக்கும் முந்தைய முறையை அகற்றி, 11% முதல் 26% வரை கட்டணம் விதித்து  உத்தரவிடப்பட்டது. இதற்கு இணங்காத அப்ளிகேஷன்கள் நீக்கப்பட்டு வருகின்றன.

ஜனவரி மற்றும் பிப்ரவரியில் வந்த இரண்டு நீதிமன்றத் தீர்ப்புகளிலும் ஸ்டார்ட்அப்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. நிர்ணயித்தபடி கட்டணம் வசூலிக்க வேண்டும் அல்லது கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து அப்ளிகேஷனை அகற்ற வேண்டும் எனத் தீர்ப்பில் கூறப்பட்டது.

பாரத் மேட்ரிமோனி, கிறிஸ்டியன் மேட்ரிமோனி, முஸ்லீம் மேட்ரிமோனி மற்றும் ஜோடி ஆகியவை வெள்ளிக்கிழமை கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டன என்று அவற்றின் நிறுவனரான முருகவேல் ஜானகிராமன் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை இந்திய இணைய உலகின் இருண்ட நாளைக் குறிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புவி வெப்பத்தைக் குறைக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய ஐடியா!

Google Removes Indian Matrimony Apps From Playstore Over Fee Dispute sgb

மேட்ரிமோனி.காம் (Matrimony.com) நிறுவனத்தின் பாரத் மேட்ரிமோனி மற்றும் இன்ஃபோ எட்ஜ் (Info Edge) நிறுவனதிதன் ஜீவன்சதி அப்ளிகேஷ்கள் தொடர்பாக அந்த நிறுவனங்களுக்கு ப்ளேஸ்டோர் சார்பில் விதிமீறல் எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இரு நிறுவனங்களும் அறிவிப்பை மறுபரிசீலனை செய்து அடுத்த நடவடிக்கைகளை எடுக்கும் திட்டத்துடன் உள்ளன என்று அவற்றின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக Matrimony.com பங்குகள் மதிப்பு 2.7% வரை சரிந்தன. அதே நேரத்தில் இன்ஃபோ எட்ஜ் பங்குகள் மதிப்பு 1.5% சரிந்தது.

இன்ஃபோ எட்ஜ் நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தனி, நிலுவையில் உள்ள அனைத்து கூகுள் இன்வாய்ஸ்களையும் உரிய நேரத்தில் தீர்த்துவிட்டதாகவும் அதன் கொள்கைகளுக்கு இணங்குவதாகவும் கூறினார்.

"பல ஆண்டுகளாக, எந்த நீதிமன்றமும் அல்லது கட்டுப்பாட்டு நிறுவனமும் கூகுள் ப்ளேயில் கட்டணம் வசூலிக்கும் உரிமையை மறுக்கவில்லை" என்றும் பிப்ரவரி உச்ச நீதிமன்றமும் 9ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பில் கூகுள் பிளேஸ்டோரின் உரிமையில் தலையிட மறுத்துவிட்டது என்றும் கூகுள் சுட்டிக்காட்டியுள்ளது.

பல ஆண்டுகளாக கூகுளின் இந்திய சந்தையில் கூகுள் ஆதிக்கம் செலுத்துகிறது. நாட்டில் பயன்பாட்டில் உள்ள போன்களில் 94% ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டவை.

ஆண்டிராய்டு ப்ளேஸ்டோரில் கட்டணம் வசூலிப்பதன் மூலம் ஆப் ஸ்டோர் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இரண்டையும் இலவசமாக வழங்குவதை உறுதி செய்கிறோம் என்று கூகுள் கூறுகிறது. கூகுள் ப்ளேஸ்டோர் தளத்தை பயன்படுத்தும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய டெவலப்பர்களில் 3% பேர் மட்டுமே சேவைக் கட்டணத்தைச் செலுத்துகிறார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது..

பெங்களூரு குண்டுவெடிப்பு: இட்லி சாப்பிட்டுவிட்டு குண்டு வைத்துச் சென்ற மர்ம நபர்! சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

Follow Us:
Download App:
  • android
  • ios