Google Pixel 7a விரைவில் அறிமுகம்! எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..
வரும் ஆண்டு துவக்கத்தில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ள நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் இணையதளங்களில் லீக் ஆகியள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கு முன்பு கூகுள் 6, 5 போன்கள் இந்தியாவில் வெளியாகததால், பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது. அதை பூர்த்தி செய்யும் வகையில், ஆப்பிள் ஐபோனுக்கு இணையாக அட்டகாசமான அம்சங்களுடன் கூகுள் பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த நிலையில், புதிதாக பிக்சல் 7A என்ற ஸ்மார்ட்போன் குறித்த சிறப்பம்சங்கள், விவரங்களை சிலர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, இது நடுத்தர பட்ஜெட் விலையில் இருக்கலாம் என்றும், அடுத்தாண்டு மே,ஜூன் மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்.. வருகிறது Realme 10 5G
ஏற்கனவே, பிக்சல் 7A குறித்து பேசப்பட்டது. அப்போது, பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் மூன்று கேமராக்கள் இருக்கலாம், பிரைமரி கேமராவில் சாம்சங்கின் 50 மெகா பிக்சல் சென்சார், 64 மெகா பிக்சல் டெலிபோட்டோ சென்சார், 13 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு சென்சார் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது டிரிபிள் கேமரா இல்லை, டூயல் கேமரா மட்டுமே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், 5W வயர்லெஸ் சார்ஜிங், 90Hz ரெவ்ரெஷ் ரேட், OLED பேனலுடன் கூடிய டிஸ்ப்ளே இருக்கலாம். கூகுள் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான டென்சார் SoC குவால்காம் சிப் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு போலீஸ் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, குவால்காம் சிப்புடன் டென்சார் SoC வருவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில், பிக்சல் 7a ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகள் குறைக்கப்பட்டு, அதற்கு ஏற்றவாறு குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.