கூகுள் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL மற்றும் Pixel 10 Pro Fold ஆகிய நான்கு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் தனது அடுத்த தலைமுறை ப்ரீமியம் ஸ்மார்ட்போன் தொடரான ​​Pixel 10 Series-ஐ "Made by Google 2025" நிகழ்வில் வெளியிட்டுள்ளது. நியூயார்க் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL மற்றும் Pixel 10 Pro Fold என மொத்தம் நான்கு மாடல்கள் அறிமுகமாகின. எல்லா போன்களிலும் கூகுளின் புதிய Tensor G5 Processor பயன்படுத்தப்பட்டு, Android 16 அடிப்படையில் இயங்குகின்றன. 

மேலும், 7 ஆண்டுகள் வரை OS Update மற்றும் Security Patch கிடைக்கும் என நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது. Pixel 10 மாடல் 6.3 அங்குல FHD+ OLED திரையுடன் வருகிறது. இது 120Hz புதுப்பிப்பு விகிதம் மற்றும் அதிகபட்சம் 3,000 nits Brightness வழங்குகிறது. கேமரா பாகத்தில் 48MP முதன்மை, 13MP அல்ட்ரா-வைட், 10.8MP டெலிஃபோட்டோ (OIS, EIS ஆதரவு) உள்ளது. முன்புறத்தில் 10.5MP செல்ஃபி கேமரா இடம் பெற்றுள்ளது. 

4,970mAh பேட்டரி கொண்ட இதற்கு 30W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது. இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.79,999. Pixel 10 Pro-வில் 6.3 அங்குல LTPO OLED திரை, 3,300 nits Brightness மற்றும் Gorilla Glass Victus 2 பாதுகாப்பு உள்ளது. 50MP ப்ரைமரி, 48MP அல்ட்ரா-வைட், 48MP டெலிஃபோட்டோ (5x ஆப்டிகல் ஜூம்) என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. 42MP செல்ஃபி கேமரா-வுடன் இது வந்துள்ளது. இந்திய விலை ரூ.99,999-இல் தொடங்குகிறது.

Pixel 10 Pro XL-இல் 6.8 அங்குல LTPO OLED திரை (120Hz), 5,200mAh பேட்டரி (45W Wired + 25W Wireless Charging) வசதி உள்ளது. கேமரா அமைப்பு Pixel 10 Pro போலவே இருக்கும். செல்ஃபி கேமரா 42எம்பி. இந்த மாதலின் இந்திய விலை ரூ.1,19,999. இந்த தொடரின் முக்கியமானதாக Pixel 10 Pro Fold அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது கூகுளின் இரண்டாவது Foldable Phone ஆகும். வெளிப்புறத்தில் 6.4 அங்குல Actua OLED கவர் டிஸ்ப்ளே, உள்ளே 8 அங்குல Super Actua Flex Display (1Hz-120Hz Refresh Rate) வழங்கப்பட்டுள்ளது. 48MP முதன்மை, 10.5MP அல்ட்ரா-வைட், 10.8MP டெலிஃபோட்டோ (5x ஜூம்), இரட்டை 10MP செல்ஃபி கேமரா உள்ளது. 5,015mAh பேட்டரி-க்கு 30W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது. இதன் இந்திய விலை ரூ.1,72,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.