ஏர்டெல் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் மியூசிக் சேவையை 6 மாதங்களுக்கு இலவசமாக வழங்குகிறது. முன்னதாக, இந்த சலுகை போஸ்ட்பெய்டு மற்றும் பிராட்பேண்ட் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்தது.

ஏர்டெல் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக புதிய சலுகையை வழங்குகிறது அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ப்ரீபெய்டு பயனர்களும் இப்போது ஆப்பிள் மியூசிக்-ஐ இலவசமாகப் பயன்படுத்த முடியும். முன்னதாக, இந்த வசதி ஏர்டெல் போஸ்ட்பெய்டு மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கிடைத்தது.

ஆப்பில் புதிய அறிவிப்பு

சமீபத்தில் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பில் பல ப்ரீபெய்டு பயனர்களுக்கு ஆப்பிள் மியூசிக் இலவச சந்தா பற்றிய பேனர் தோன்றியுள்ளது. எனினும், இதுகுறித்து ஏர்டெல் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே, எந்த பயனர்கள் இந்த சலுகைக்கு தகுதி பெறுவார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.

ஆறு மாத இலவசம்

ஆப்பிள் மியூசிக் சலுகை 6 மாதங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், பயனர்கள் மாதம் ரூ.119 செலுத்தி சந்தாவைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். எனவே, இந்த சலுகை உங்களுக்குக் கிடைக்கிறதா என்பதை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

முன்னதாக வழங்கப்பட்ட சேவைகள்

ஏர்டெல், 2025 பிப்ரவரி மாதம் முதல், தனது பிராட்பேண்ட் மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் டிவி+ மற்றும் ஆப்பிள் மியூசிக் சேவைகளை வழங்கத் தொடங்கியது. தற்போது, அந்த சலுகை ப்ரீபெய்டு பயனர்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

AI சேவையும் இலவசம்

இதற்கு முன், 2025 ஜூலை மாதம், ஏர்டெல் அனைத்து பயனர்களுக்கும் (மொபைல், வைஃபை, DTH) பெர்ப்ளெக்சிட்டி புரோ AI சேவை வருடத்திற்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. இந்த சந்தா மதிப்பு சுமார் ரூ.17,000 ஆகும்.

இந்திய தொடர்பு

பெர்ப்ளெக்சிட்டி AI-யின் இணை நிறுவனர் மற்றும் CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர் இந்தியரானதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முதன்முறையாக ஏர்டெலுடன் பெர்ப்ளெக்சிட்டி இணைந்துள்ளது. இதன் மூலம், பயனர்களுக்கு ஒரே நேரத்தில் இசை, டிவி மற்றும் AI சேவைகளை இலவசமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.