விமானத்தில் அதிவேக இன்டர்நெட்டா ? எலோன் மஸ்கின் அடுத்த முயற்சி

ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும்போது கூட ஸ்டார் லிங்க் மூலம் அதிவேக இன்டர்நெட் கிடைக்கும் என்று சோதனையில் தெரியவந்துள்ளது.

Fast internet in flights? Elon Musk's Starlink shows 100Mbps is possible at 30,000 ft in the air

எலான் மஸ்கின் டெஸ்லா ஸ்டார் லிங்க் மூலம் உலகிங் எங்கிருந்து இணையம் பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. எலான் மஸ்க் நிறுவனம் ஏவும் ஸ்டார் லிங்க் ஆனது, வானில் நட்சத்திரங்கள் போல்  ஆங்காங்கு நிலைநிறுத்தப்படும். இந்த ஸ்டார் லிங்க் மூலம் உலகில் எங்கிருந்தாலும் அதற்கான ரிசிவர் வைத்துக்கொண்டு செயற்கைக்கோள் இன்டர்நெட்டை தடையின்றி பெற முடியும். 

இந்த நிலையில்,  ஒரு விமானத்தில் அதிவேக இணையத்தை கொண்டு வரும் சோதனையில் ஸ்பேஸ்எக்ஸானது, அமெரிக்காவில் உள்ள தனியார் விமான நிறுவனமான JSX உடன் கை கோர்த்து, ஸ்டார்லிங்க் சோதனையை நடத்தியது.

இந்த சோதனையில் ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் இணைய வேகத்தை சோதித்தினர். பர்பாங்கில் இருந்து கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகருக்கு JSX பிராந்திய விமானத்தில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது, அப்போது, விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்தபோதும் 100 Mbps அளவிலான இணையத்தின் வேகம் இருந்தது.

ஸ்டார்லிங்க் பூமியை மேற்பரப்பில் இருந்து 550 கிமீ தொலைவில் சுற்றி வரும் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களைப் பயன்படுத்துகிறது.
ஸ்பேஸ்எக்ஸ் தொலைதூர இடங்கள் மற்றும் தீவிர காலநிலைகளில் வசிக்கும் மக்களுக்கு செயற்கைக்கோள் மூலம் அதிவேக இணையத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Flipkart, Amazon இல் ஆர்டர் செய்தவுடன் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்?

மேலும் அதன் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்கு நேரடி இணைய இணைப்பை வழங்குகிறது.  ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் அமைப்பு பூமியின் மேற்பரப்பிற்கு அருகாமையில் இருப்பதால், இது 20-40 மில்லி விநாடிகளுக்கு இடைப்பட்ட தாமதம் மற்றும் 50Mbps முதல் 150Mbps வரையிலான இணைய வேகத்துடன் கணிசமான வேகமான தகவல்களை வழங்க முடியும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios