OnePlus பிரியர்களே.. உங்களுக்கான குட் நியூஸ்!
OnePlus நிறுவனம் புதிதாக Nord CE 3 ஸ்மார்ட்போனை தயாரித்து வரும் நிலையில், அதன் சிறப்பம்சங்கள், டிசைன் குறித்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன.
OnePlus நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் கைக்கு அடக்கமாக, மெல்லிய தோற்றத்தில், பிரிமீயம் தரத்தில் இருப்பதால் ஆப்பிள், கூகுள் பிக்சலுக்கு அடுத்தபடியாக ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பார்க்கப்படுகிறது. குறிப்பாக நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் நல்ல விற்பனையாகி வருகிறது. கடந்த அமேசான் தீபாவளி ஆஃபர் சேலில் நார்டு போன்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் பெரும் ஆர்வம் காட்டினர்.
இந்த நிலையில், OnePlus Nord CE 3 ஸ்மார்ட்போனின் தோற்றம் டிசைன் ஆன் லீக்ஸ் என்ற இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி, CE 3 ஆனது CE 2, CE 2 Lite 5G ஐ விட பெரிதாக, 6.7 இன்ச் அளவில் உள்ளது. இதற்கு முன்பு வெளியான CE 2, CE 2 Lite 5G ஸ்மார்ட்போன்களில் 6.43 மற்றும் 6.59 இன்ச் டிஸ்ப்ளே இருந்தன.
CE 2 Lite 5G இலிருந்து அதே 2 MP மேக்ரோ மற்றும் டெப்த் கேமராக்கள் தான் தற்போது CE 2 ஸ்மார்ட்போனிலும் வருகிறது. இருப்பினும், ப்ரைமரி ரியர் ஷூட்டர் இப்போது 64 MPக்கு பதிலாக 108 MP இல் வருகிறது. முன்பக்க கேமராவில் 16 MP அல்ட்ரா வைட் லென்ஸ் இருப்பது போல் தெரிகிறது.
பெரிய பேட்டரி, சிறந்த கேமராக்கள் மற்றும் வேகமான சார்ஜிங் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது, Nord CE 3 ஸ்மார்ட்போனானது ஒரு ஆல்-ரவுண்டராக இருக்கும். வரும் மார்ச் அல்லது ஜூன் மாதத்திற்குள்ளாக ஒன்பிளஸ் நார்டு CE 3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் முதன்முறையாக ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் தான் குறைந்த விலையில் 5ஜி அம்சம் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.50 ஆயிரத்திற்குள் iPhone 13 வாங்கலாம்.. எப்படி? இப்படி..
OnePlus Nord CE 3 சுருக்கமான சிறப்பம்சங்கள்:
- திரை: 6.7-இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, 120Hz ரெவ்ரெஷ் ரேட்
- பிராசசர்: ஸ்னாப்டிராகன் 695 5G
- ஸ்டோரேஜ்: 8 + 128 GB / 12 + 256 GB
- பின்புற கேமராக்கள்: 108 MP + 2 MP + 2 MP
- முன்பக்க கேமரா: 16 MP
- பேட்டரி: 5000 mAH
- சார்ஜர்: 67W ஃபாஸ்ட் சார்ஜர்
- கூடுதல் சிறப்பம்சங்கள்: பக்கவாட்டில் விரல் ரேகை சென்சார்