Asianet News TamilAsianet News Tamil

பிரஷ்ஷர்களுக்கு ரூ.2.52 லட்சம் சம்பளம்... காக்னிசென்ட் விளம்பரத்தை வச்சு செஞ்ச நெட்டிசன்கள்!

காக்னிசன்ட் நிறுவனம் 2024ஆம் ஆண்டுக்கான ஆஃப் காம்பஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஆண்டுக்கு ரூ.2.52 லட்சம் சம்பள பேக்கேஜை வழங்குவதாகக் கூறியிருந்தது தான் ட்ரோலாக மாறிவிட்டது.

Cognizant trolled over job posting offering freshers Rs 2.52 lakh per annum salary sgb
Author
First Published Aug 14, 2024, 12:13 AM IST | Last Updated Aug 14, 2024, 12:16 AM IST

அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசண்ட், சமீபத்தில் வெளியிட்ட வேலைவாய்ப்பு விளம்பரம் வைரலாகியுள்ளது. சமூக ஊடகங்களில் பலர் அந்த விளம்பர அறிவிப்பை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

காக்னிசன்ட் நிறுவனம் 2024ஆம் ஆண்டுக்கான ஆஃப் காம்பஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஆண்டுக்கு ரூ.2.52 லட்சம் சம்பள பேக்கேஜை வழங்குவதாகக் கூறியிருந்தது தான் ட்ரோலாக மாறிவிட்டது.

ஐடி துறையில் புதிய பட்டதாரிகளுக்கான இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு அதிக கவனம் பெற்றது. ஆகஸ்ட் 13ஆம் தேதி காக்னிசன்ட் நிறுவனத்தின் எக்ஸ் பக்கமான "இந்தியன் டெக் & இன்ஃப்ரா" மூலம் பகிரப்பட்டது.

KYC, KYC எல்லா பேங்க்லயும் இதுதான் சொல்றாங்க... அப்படின்னா என்ன? தெரிஞ்சுக்கோங்க!!

“காக்னிசண்ட் ஒரு அற்புதமான ஆஃப் காம்பஸ் வேலைவாய்ப்பு இயக்கத்தை அறிவிக்கிறது. 2024ஆம் ஆண்டில் புதிய பட்டதாரிகளிடம் இருந்உத விண்ணப்பங்களை வரவேற்கிறோம். விண்ணப்பிக்க காலக்கெடு - ஆகஸ்ட் 14. பேக்கேஜ் - ஆண்டுக்கு ரூ.2.52 லட்சம்.” என்று அந்த எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருக்கிறது.

இந்தப் பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே, 1.5 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ் கிடைத்தது. சம்பளப் பேக்கேஜில் மாதம் ரூ.21,000 எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது சமூக ஊடக பயனர்களிடமிருந்து பரவலான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. பலரும் ஊதியம் மிகவும் குறைவாக இருப்பதாக உணர்வதாகக் கூறியுள்ளனர்.

சில பயனர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், சிலர் கேலி செய்யும் வகையிலும் காக்னிசன்ட் விளம்பரத்தை விமர்சித்துள்ளனர். ஒரு பயனர் கிண்டலாக, "ஆண்டுக்கு 2.52 லட்சம். ரொம்ப தாராளம். இவ்வளவு பணத்தை வைத்து பட்டதாரிகள் என்ன செய்வார்கள்?" என்று கூறியுள்ளார்.

மற்றொரு பயனர், "இந்த பேக்கேஜ் 2002 பேட்ச்சில் வழங்கப்பட்டது. வீடு, பயணச் செலவு, உணவு போன்றவற்றிற்குச் சலுகைகள் இல்லை. தவிர, பிஎஃப் பிடித்தங்களும் உள்ளன. மெட்ரோ நகரங்களில் வெறும் 18-19 ஆயிரம் ரூபாயில் எப்படி சமாளிக்க முடியும்" என்று விரக்தியுடன் கூறியுள்ளார்.

“இது ஒரு கிராமத்தில் உள்ள வீட்டுக்கு ஒரு வருட வாடகை மற்றும் சில மேகி பாக்கெட்டுகளை வாங்குவதற்குப் போதுமானது. மக்கள் டீயை மட்டும் குடித்துக்கொண்டு நம்பிக்கையுடன் வாழ முடியுமா என்பதை காக்னிசண்ட் யோசித்துப் பார்க்க வேண்டும்" என்று ஒருவர் கூறியுள்ளார்.

வங்கதேசத்தின் செயின்ட் மார்ட்டின் தீவில் என்ன இருக்கிறது? அமெரிக்கா குறி வைப்பது எதற்காக?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios